மகாமதி, சதாவதானி செய்குதம்பிப் பாவலர் வாழ்வோவியம்- கவிஞர் நாஞ்சில் ப.ஜமால் முஹம்மத்; பக்.302; ரூ.330; சதாவதானி செய்குதம்பிப் பாவலர் தமிழ்ச் சங்கம், நாகர்கோவில்-2; ✆98401 40104.
இஸ்லாமியப் பாடல்களை எழுதி பெயர் பெற்றவர் நூலாசிரியர், தனது தாத்தா செய்குதம்பிப் பாவலரைப் பற்றி எழுதிய நூல் இது. பாவலரின் வரலாறு- பாவலர் பற்றிப் புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள், பாவலர் கவிதைகளில் தேர்ந்தெடுத்த கவிதைகள் என மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.
பாவலர் கோட்டாறு இடாலக்குடியில் 1874-இல் பிறந்தார். திருவிதாங்கூர் சமஸ்தானப் பள்ளியில் (மலையாள வழி) முதல் ஆறு மாதங்களிலேயே நான்கு வகுப்புகள் தேர்ச்சி பெற்று ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
தமிழை சங்கரநாராயண அண்ணாவியாரிடம் இலவசமாகக் கற்று, 12-ஆவது வயதில் கவிதை புனைந்தார். 16-ஆம் வயதில் 'திருக்கோட்டாற்று பதிற்றுப் பத்தந்தாதி', 'திருநாகூர் திருவந்தாதி' என நூல்களை அச்சியற்றினார். இவரின் முதல் மேடைப் பேச்சு பட்டாரியார் நெடுந்தெருவில் அமைந்தது. திருக்குறள் குறித்து இரண்டு மணி நேரம் உரையாற்றி பெயர் பெற்றார்.
எல்லாமே ஏறுமுகமான வளர்ச்சி. கவிஞராக, எழுத்தாளராக, ஆசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, அவதான ஆசிரியராக, இலக்கண, இலக்கிய உரையாளராக, காந்திய வழி விடுதலைப் போராட்டவாதியாக, நூறு பொருண்மைகளில் பதிலளிக்கும் சதாவதானியாக, சீறாப்புராணத்துக்கு முதல்முதலாக உரை எழுதிய ஆசிரியராக, அருட்பா- மருட்பா போரில் வள்ளலாரின் அருட்பாவுக்கு ஆதரவாக நின்று ஆணித்தரமாக வாதாடி வென்றதையும், அதற்காக இவரை யானை மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றது என அனைத்துச் சம்பவங்களையும் நூலாசிரியர் சுவைபட விவரித்துள்ளார். அரிய தகவல்களை அளிப்பதோடு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டியாகவும் அமைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.