சரித்திர தேர்ச்சி கொள்

சரித்திர தேர்ச்சி கொள்

சரித்திர தேர்ச்சி கொள் - ஜா.சலேத்; பக்.192; ரூ.200; வெற்றிமொழி வெளியீட்டகம், திண்டுக்கல்-624001, ✆ 97151 68794.

தற்காலத் தமிழ்க் கவிதைப் பரப்பில் ஆய்வாளரான நூலாசிரியர் பல்வேறு சுயமுன்னேற்ற நூல்களை எழுதியுள்ளார். அந்த வரிசையில், சோர்ந்து கிடக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அறிவுரையாக இல்லாமல் அறவுரையாக எழுதியிருப்பதால், தனித்த இடத்தை பெறுகிறது.

ஒவ்வொரு பகுதியும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ வழிகாட்டுகிறது. இலக்கே உனது கிழக்கு, கிழக்கில் இருந்து புறப்படு, செயலே சிறந்த சொல்

உள்ளிட்ட பகுதிகள் வாழ்க்கை மீது பிடிப்பு இல்லாத இளைஞர்கள் மற்றும் நம்பிக்கையுள்ள இளைஞர்களின் இதயத்துக்கு நெருக்கமாக போய் அமர்ந்து கொள்ளும் வகையில் உள்ளன.

'வெற்றிக்காக காத்திருத்தல் என்பது உறங்கி எழுவது அல்ல. பல முயற்சிகள் செய்து, தோல்விகளை பொருள்படுத்தாமல் அதை எதிர்த்து மோதி எந்தப் பிழையால் தவறு ஏற்பட்டது என்பதை உணர்ந்து பயணிப்பதுதான் வெற்றிக்கு வழி செய்யும்' இத்தகைய வரிகள் தோல்வியை எதிர்த்துப் போராடும் ஊக்கத்தை அளிக்கிறது.

இலக்கை தெளிவாக்கி அதை நோக்கி நகரும் போது பாதையும் தெளிவாகிறது. அப்படி இலக்கை முன்னிறுத்தி நிறைவை எய்திய பல ஆளுமைகளின் மாதிரிகள் இந்நூலின் பக்கங்களில் சான்றுகளாக விரிந்து கிடக்கின்றன.

குறிப்பாக, கொடும் பஞ்சத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தனது சொத்துகளை இழந்து கஞ்சி காய்ச்சி ஊற்றிய மதுரை குஞ்சரம் அம்மாள் முதல் ஆதனக்கோட்டை ஜெயலட்சுமி வரையிலான பல்வேறு ஆளுமைகள் இதில் நினைவுக் கூரப்படுகின்றனர். சிறந்த வழிகாட்டும் நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com