ஏஐ எனும் ஏழாம் அறிவு

செயற்கை நுண்ணறிவின் விரிவான பார்வை
ஏஐ எனும் ஏழாம் அறிவு
Updated on
2 min read

ஏஐ எனும் ஏழாம் அறிவு - ஹரிஹரசுதன் தங்கவேலு; பக். 192; ரூ.230; ஜீரோ டிகிரி பப்ளிஷிங். சென்னை -40; ✆ 89250 61999;

தொழில்நுட்பத்தின் தொன்மக் கதைகளில் ஆரம்பித்து இன்றைக்கு அடைந்திருக்கும் இமாலய வளர்ச்சி வரையிலான விஷயங்களை விரிவாகப் பேசுகிறது இந்நூல். முதல் அத்தியாயத்திலேயே செயற்கை நுண்ணறிவின் தொடக்கப் புள்ளியாக ஜெர்மனி இருந்திருப்பதையும், ஹிட்லரின் நாஜி படையினர் எதிரிகளின் கண்களை மறைத்து எப்படி தகவல் பரிமாற்றம் செய்துள்ளனர் என்பதையும் அசுரப் பாய்ச்சலான எழுத்து நடையில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.

எனிக்மா என்ற தட்டச்சு இயந்திரம் மறையாக்கக் குறியீட்டுடன் இயங்கி இரண்டாம் உலகப் போரின்போது எதிரிகளை வீழ்த்தியதும், ஜெர்மனின் அசைக்க முடியாத அஸ்திரமாக இருந்த அந்த இயந்திரத்தை உலக நாடுகள் எப்படி போராடி உடைத்தன என்பதும் விறுவிறுப்பான மொழியில் விளக்கப்பட்டுள்ளது.

இன்றைய இணைய கட்டமைப்புகளுக்கும், செயற்கை நுண்ணறிவு நுட்பங்களுக்கும் வித்திட்டது எனிக்மா இயந்திரத்தின் ரகசியத்தை அவிழ்ப்பதற்காக பிரிட்டன் கணிதவியலாளர் ஆலன் டூரிங் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள்தான் என்கிறார் நூலாசிரியர்.

அப்படியாக ஆலன் டூரிங்கால் உருவாக்கப்பட்ட இயந்திரம் ஒன்றுதான் கணினியாக மறுபிறவி எடுத்தது என்றும், அதிலிருந்து உருமாற்றமடைந்து இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவெடுத்திருக்கிறது என்றும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்பட்டிருக்கும் மேம்பாடு, புதிய வளர்ச்சிகளை பட்டியலிட்டிருக்கும் நூலாசிரியர், அதனால் ஏற்படும் பாதகங்களையும் பகிர்ந்துள்ளார்.

மனிதனின் ஏழாம் அறிவாக மாறியிருக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வரலாற்றையும், வளர்ச்சியையும் ஆழ்ந்து விவரிக்கும் அதி முக்கிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com