இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு

இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த தகவல்களைத் தேடுவோருக்கும் பயனுடையதாக இருக்கும் இந்த நூல்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு
Updated on
2 min read

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - டாக்டர்கள் க.வெங்கடேசன், பி.எஸ்.சந்திர பிரபு; பக்.418; ரூ.260; வி.சி. பப்ளிகேஷன்ஸ், ராஜபாளையம்- 626 117; ✆ 94867 37640.

இந்திய விடுதலைப் போர் குறித்து, எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் எழுதிய "சுதந்திர சரித்திரம்' தொடங்கி வெளிவந்திருக்கும் நூற்றுக்கணக்கணக்கான நூல்களில் ஒருசில மட்டும்தான் மிகச் சுருக்கமாகவும், எந்தவொரு நிகழ்வும் விடுபட்டு விடாமலும் பதிவு செய்கின்றன. அந்த வரிசையில் இணைகிறது இந்த நூல்.

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் முன்னாள் முதல்வர் க.வெங்கடேசன், வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் பி.எஸ்.சந்திரபிரபுவுடன் இணைந்து தொகுத்திருக்கும் இந்த நூல் மிகவும் நுணுக்கமாகவும், தெளிவாகவும் ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்கிறது.

வரலாற்று மாணவர்களுக்குப் பாட நூலாக வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட நூல் என்பதால், காலவரிசைப் பட்டியல், மேற்கோள் பட்டியல் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுக்குப் பின்னர் பிறந்த மாணவர்கள் இதைப் படிக்கும்போது, சமகால இந்திய வரலாற்றை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

வழக்கமாக, சுதந்திரப் போராட்ட வரலாற்றை காந்திக்கு முன், பின் என்று இரண்டாகப் பிரிப்பது வழக்கம். இந்த நூல் காங்கிரஸ் இயக்கம் உருவான வரலாறு, சுதேசி இயக்கம் முதல் ஒத்துழையாமை இயக்கம் வரை, சுயராஜ்யக் கட்சியும் பிரிவினையும், சுதந்திரம் வரை, விடுதலைப் போராட்டத்தில் வகுப்புவாதம், புரட்சியாளர்களின் பங்கு, பண்டித நேரு, தமிழ்நாடு உள்ளிட்ட பங்களிப்புகள் என்று ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

1985-இல் வெளியான முதல் பதிப்பு பல மறு பதிப்புகளும், திருத்திய பதிப்புகளும் கண்டு இப்போது தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சீரமைத்த பாடத்திட்டங்களுக்கு ஏற்ப புதிய பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. கோவை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயத்தில் பயின்று உருவானவர் டாக்டர் க.வெங்கடேசன் எனும்போது, அவரது படைப்பிலும் அதன் தாக்கம் இருக்கத்தானே செய்யும். மாணவர்கள் மட்டுமல்லாது, இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த தகவல்களைத் தேடுவோருக்கும் பயனுடையதாக இருக்கும் இந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com