தென் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நிலையில் இருந்த தலைமறைவுக் காலப் பணிகள் அவசியம் வாசிக்க வேண்டியவை.
தென் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்கம்
Updated on
2 min read

தென் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்கம் - அமீர் ஐதர் கான் சுயசரிதை நூல் (தமிழில் - அருணானந்த்); பக். 144; ரூ. 180; அறம் பதிப்பகம், ஆரணி- 632316; ✆91507 24997.

ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான இந்திய விடுதலைப் போராட்டத்துடன் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டவர் அமீர் ஐதர் கான். அவரது சுயசரிதைதான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூல். நூலின் மூன்றில் ஒரு பகுதி மும்பையிலிருந்து அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் அமீர் ஐதர் கான் மேற்கொண்ட பயணம், அங்கு மேற்கொள்ளப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கப் பணிகள். மீதமுள்ள இரு பகுதிகள், சென்னையில் தங்கியிருந்து 'சங்கர்' என்ற பெயரில் வடநாட்டுப் பிராமணராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, கட்சியை உருவாக்க அவர் செய்த பணிகள். தனது பதினைந்து வயதில் மும்பை வந்த அமீர் ஐதர் கான், இங்கிலாந்து கப்பலில் ஏறிச் சென்று, அங்கு தொழிலாளர்களுக்கான ஊதிய சுரண்டலை எதிர்த்து வேலைநிறுத்தம் நடத்தி வெற்றி பெற்றவர்.

அமீர் ஐதர் கான், ஒவ்வொரு நாடாக இடம்பெயர்ந்து வருவதும், அப்போது அவரை உளவுத் துறையினர் பின்தொடர்ந்து வருவதும், அவர்களிடமிருந்து லாகவமாகத் தப்பிச் சென்று இயக்கப் பணிகளை மேற்கொள்வதும் படிப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கிறது.

சென்னையில் 'இளம் தொழிலாளர் லீக்' என்ற அமைப்பைத் தொடங்கி, அந்த அமைப்புக்காக 'முன்னேற்றம்' என்ற இதழையும் நடத்தியிருக்கிறார் அமீர் ஐதர் கான். இத்துடன் இங்கிருந்து நபர்களைத் தேர்வு செய்து, கம்யூனிஸ கல்வியைக் கற்றுத் தருவதற்காக மாஸ்கோவுக்கு அனுப்புவதே ஐதர்கானின் பிரதான பணியாக இருந்திருக்கிறது.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக துண்டறிக்கை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட ஐதர் கான், நீதிமன்றத்தில் நடத்திய வாதங்களும், சேலம் சிறையில் அவர் நடத்திய கிளர்ச்சிகளும் விறுவிறுப்பானவை. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் இந்தச் சூழலில், அதன் ஆரம்ப நிலையில் இருந்த தலைமறைவுக் காலப் பணிகள் அவசியம் வாசிக்க வேண்டியவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com