மங்கலம் தருவாள் மாங்காடு காமாட்சி (அமானுஷ்ய நாவல்) - கே.பி.அறிவானந்தம்; பக்.133; ரூ.160; சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை-94; ✆ 044-4507 4203.
மாங்காடு காமாட்சி அம்மனின் மகிமையைச் சொல்லும் இந்த நாவலில் இடம் பெறும் ஏகாம்பர சிவாச்சாரியாரை நேரில் சந்தித்து உரையாடியவர் இந்த நாவலின் ஆசிரியர் கே.பி.அறிவானந்தம். அன்று தான் கேட்ட சம்பவங்களையே விறுவிறுப்பூட்டும் நாவலாக எழுதியிருக்கிறார்.
சதிகாரர்கள் ஏற்படுத்திய விபத்தில் தன் பெற்றோரை இழந்த ஜெயா, தன்னைச் சுற்றியும் சதிவலை பின்னப்பட்ட நிலையில் ஆறு வார விரதமேற்ற தைய நாயகியின் ஆதரவைப் பெற்று தானும் அந்தக் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்து எவ்வாறு சதியிலிருந்து மீண்டு வருகிறாள் என்பதைச் சொல்கிறது இந்த நாவல். மாங்காடு காமாட்சி அம்மன் அருளை வெளிப்படுத்தும் அமானுஷ்ய சம்பவங்களை நூலின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் காண முடிகிறது.
பக்தியும், நம்பிக்கையும் கொண்டவர், எந்த ஆபத்தில் இருந்தாலும் தப்பித்து விடுவார்கள் என்பது அழுத்தமாக உணர்த்தப்பட்டுள்ளது. மாங்காடு காமாட்சி ஊசி முனையில் ஒற்றைக் காலில் தீயின் நடுவே தவம் செய்வதைக் கண்ட ஜெயா, தன் வாழ்வும் இப்படியே ஆபத்தின் நடுவில் இருப்பதை உணர்ந்து மீள முயல்கிறாள். விரதம் இருந்து எலுமிச்சம்பழம் கொடுத்து வழிபட்டு குறை தீர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தியதை அனுபவமாக தந்து வழிகாட்டுவதை கதையாகக் கூறுகிறது.
அத்துடன் அன்னை காமாட்சி மாங்காட்டுக்கு எழுந்தருளிய வரலாறு, அர்த்தமேரு பீடத்தின் பெருமை, ஸ்ரீசக்கர மகிமை ஆகியவையும் நூலில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. அமானுஷ்ய நாவல்களை அதிகம் விரும்புவோருக்கு இந்த நூல் ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.