குற்றவாளிக்கூண்டில் மநு?

இடைச்செருகல் இருந்ததா? உள்ளிட்ட ஆழமான கேள்விகளுக்கு ஆராய்ச்சி நோக்கில் இந்த நூல் பதிலளிக்கிறது.
குற்றவாளிக்கூண்டில் மநு?
Published on
Updated on
1 min read

குற்றவாளிக்கூண்டில் மநு?- எஸ்.செண்பக பெருமாள்; பக்.144; ரூ.170; கிழக்கு பதிப்பகம், சென்னை - 600014. ✆ 044-42009603

பண்டைய இந்தியா, மநு சாஸ்திரம், மநுவின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையான மநு ஸ்மிருதிகளை குறித்து இந்த நூல் விவரிக்கிறது.

மநு தர்ம சாஸ்திரம் என்பது இந்தியச் சமூகங்களைப் பற்றிக் கூறுகிற ஒரு நூலே தவிர, இந்திய சமயங்களைப் பற்றிக் கூறும் நூல் அல்ல என்று நூலாசிரியர் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகிறார்.

வர்ணம் என்கிற சமூக அமைப்பானது, எவ்வாறு ஜாதிகள் என்னும் வேறோர் அமைப்பாக மாறியது என்பது குறித்த அம்பேத்கரின் கருத்துகளை இந்நூல் மேற்கோள் காட்டுகிறது.

பிறப்பின் அடிப்படையில் இல்லாமல், குணத்தில் அடிப்படையிலும், குணம் சார்ந்த செயல்களின் அடிப்படையிலுமே நான்கு வர்ணங்கள் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்தன. சொந்த முயற்சியால் ஒருவர் தனது வர்ணத்தை மாற்றிக் கொள்ளலாம். பௌத்த மதம் செல்வாக்கு பெற்ற காலத்தை 'ஆபத்துக் காலம்' என்றும், ஆபத்துக் காலத்தில் வேதங்கள், மநு தர்ம சாஸ்திரங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, நான்கு வர்ணத்தவருக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன என்றும் இந்த நூல் குறிப்பிடுகிறது. பௌத்த மதத்தின் செல்வாக்கு குறைந்த பிறகு ஆபத்துக் கால விதிமுறைகள் விலக்கப்படாமல் நிலைபெற்றதாலேயே வர்ணம் ஜாதியாக மாறியது என்று இந்த நூல் நிறுவுகிறது.

மநு தர்ம சாஸ்திரம் என்பது ஒற்றை நூலா அல்லது பல்வேறு நூல்களா? பிராமணர்கள் யார்? சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதா? மநு குறித்த அம்பேத்கரின் கருத்துகள் என்ன? அக்காலத்தில் பெண்களின் நிலை என்ன? மநு தர்ம சாஸ்திரத்தில்

இடைச்செருகல் இருந்ததா? உள்ளிட்ட ஆழமான கேள்விகளுக்கு ஆராய்ச்சி நோக்கில் இந்த நூல் பதிலளிக்கிறது.

பெரும்பாலும் அம்பேத்கரின் கருத்துகளை மையமாக்கி எழுதப்பட்டுள்ள இந்த நூல், சமூகங்களுக்கு இடையே நிலவும் பிணக்குகளை நீக்கி, நல்லிணக்கத்தை உருவாக்கும் உன்னத முயற்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com