உலக சினிமா

இந்தப் புத்தகத்தில் திரைப்படங்களின் பெயர்களும், அதன் பிறப்பிடமும், தோற்றமும், சேர்ந்த ஒரு பட்டியலாக நூலாசிரியர் பதித்திருந்தால் வாசிப்போருக்கு இன்னும் எளிதாக இருக்கும்.
உலக சினிமா
Published on
Updated on
1 min read

உலக சினிமா-பா.ராமமூர்த்தி; பக்.144; ரூ.150; வளர்பிறை பதிப்பகம், சென்னை-600053 ✆ 9884967484.

உலக திரைப்படங்கள் குறித்த தேடல் உள்ளவர்களுக்கான ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதான ஒரு பதம்பார்க்கும் நூல் தளம்தான் இந்தத் தொகுப்பு.

உலகத் தரமான படங்களாக அடையாளம் காட்டப்படும் ஈரானிய மொழிப்படமான 'சில்ரன் ஆஃப் ஹெவன்' என்கிற திரைப்படத்தில் தொடங்குகிறது இந்நூல். தொலைந்த காலணிக்காக போராடும் ஒரு சிறுவனின் போராட்டத்தை சொல்லி குழந்தைகள் தங்களது குடும்ப வறுமையை ஏற்றுக்கொண்ட சூழலை திரைப்படம் நகர்த்தி இறுதியில் வெற்றிவாகையாக அவனுக்கு என்ன நடக்கிறது என்று திரைப்படத்தின் மொத்தக் காட்சிகளையும் சொல்லாமல், இந்தத் திரைப்படத்தைக் காணவேண்டும் என்ற

ஆர்வத்தைத் தூண்டும்படி இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

வாழ்வின் அங்கமாக இருக்கும் ஏதோ ஒன்றைத் தேடுவதுதான் ஒட்டுமொத்தப் பயணமாக இருக்கிறது என்பதையே பல திரைப்படங்கள் காட்டுகின்றன. திரைப்படங்களில் இருந்து வாழ்க்கையை எடுக்காமல் வாழ்க்கையிலிருந்துதான் திரைப்படத்தை எடுக்க வாய்க்கும் என எல்லா இயக்குநர்களும் நிரூபித்திருக்கிறார்கள்.

மொத்தம் 11 திரைப்படங்களின் விமர்சனங்களை முழுமையாக தந்திருக்கிறார் ஆசிரியர். மொழி என்பது முதன்மை கிடையாது அது உணர்வுக்கு அடுத்தபடியாகத்தான். உலகம் முழுவதும் உள்ள இயக்குநர்களாகிய படைப்பாளர்கள் மறைந்து வரும் மனிதத் தன்மையை கையில் ஏந்தி காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

உலகத் திரைப்படங்களின் மொழியாக உணர்வுகளே இருக்கின்றன. படைப்பாளியும் பார்வையாளனும் ஒரே ஒத்திசைவில் அதிரும்போது மனிதத்தன்மையின் சேதாரம் சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையை அனைவரின் முன்னிலும் வித்திடுகிறார் இயக்குநர்.

இந்தப் புத்தகத்தில் திரைப்படங்களின் பெயர்களும், அதன் பிறப்பிடமும், தோற்றமும், சேர்ந்த ஒரு பட்டியலாக நூலாசிரியர் பதித்திருந்தால் வாசிப்போருக்கு இன்னும் எளிதாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com