இராசீவ் காந்தி கொலை வழக்கு: தூக்கு மேடையிலிருந்து 26 தமிழர்கள் மீட்பு

ராஜீவ் காந்தி படுகொலையில் மாற்றி யோசிப்பவர்களும் அவசியம் படித்துப் பாதுகாக்க வேண்டிய ஒப்பற்ற ஆவணம்.
இராசீவ் காந்தி கொலை வழக்கு: தூக்கு மேடையிலிருந்து 26 தமிழர்கள் மீட்பு
Published on
Updated on
1 min read

இராசீவ் காந்தி கொலை வழக்கு: தூக்கு மேடையிலிருந்து 26 தமிழர்கள் மீட்பு - பழ. நெடுமாறன்; பக்.560; விலை ரூ. 800; உலகத் தமிழர் பேரமைப்பு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், விளார் சாலை, தஞ்சாவூர்- 613006, ✆ 04362 255044.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்குமே மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மக்களைத் திரட்டியும் சட்டப் போராட்டத்தின் மூலமும் அனைவரும் விடுவிக்கப்பட்ட வரலாறு முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

26 தமிழர் மீட்பு இயக்கத்தை முன்னெடுத்த பழ.நெடுமாறன், இந்நூலில் போராட்டம், வழக்கு மட்டுமின்றி, ராஜீவ் படுகொலை தொடர்பான அனைத்து விவரங்களையும் தொகுத்திருக்கிறார்.

'புலிகள்'தான் இந்தப் படுகொலையை நிகழ்த்தியிருக்கின்றனர் எனத் தெரிவித்த சிபிஐ புலனாய்வுக் குழு, அந்தக் கோணத்தில் மட்டுமே புலனாய்வை நடத்தியதுடன் உண்மைக் குற்றவாளிகளை மறைத்துவிட்டது என்று குறிப்பிடும் நெடுமாறன், விசாரணைப் பதிவுகளிலிருந்தே ஏராளமான சான்றுகளைத் தருகிறார்.

ரகசியமாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணை விவரங்களுடன், கடைசி வரை மக்களுக்குத் தெரியாமலேயே போய்விட்ட மிக முக்கியமான தகவலைத் தெரிவித்துவிட்டுப் பின்னர் திரும்பிவர முடியாமல்போன "நல்லவர்' பற்றியும் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு பெரும்பகுதிகளான நூலில் ராஜீவ் படுகொலை, வழக்கு புனையப்பட்ட விதம் பற்றியும், மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் எவ்வாறு கட்டப்பட்டது; போராடியது பற்றியும், பெருகிய மனிதநேயச் செயற்பாடுகளும், ஆணையங்கள் சுட்டிக்காட்டிய உண்மைக் குற்றவாளிகள் பற்றியும் விரிவாகத் தரப்படுகின்றன.

ஒரு வழக்கில் அரசதிகாரமும் விசாரணை அமைப்புகளும் நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் செய்ய முடியும்? என்பது நூல் நெடுகிலும் இழையோடி மனதை அழுத்துகிறது.

மரண தண்டனைக்கு எதிரானவர்களும் மனித உரிமைப் போராளிகளும் ராஜீவ் காந்தி படுகொலையில் மாற்றி யோசிப்பவர்களும் அவசியம் படித்துப் பாதுகாக்க வேண்டிய ஒப்பற்ற ஆவணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com