
சேல்ஸ் சைக்காலஜி- சதீஷ் கிருஷ்ணமூர்த்தி; பக்.272; விலை ரூ.300; கிழக்கு பதிப்பகம், லாயிட்ஸ் சாலை, சென்னை 600014 ✆ 044-42009603.
ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக ஒரு பொருளை நேரடியாக தனி வாடிக்கையாளர் அல்லது விநியோக நிறுவனம் அல்லது விற்பனை நிலையத்துக்கு எடுத்துச் செல்லும் முக்கிய பொறுப்பில் உள்ளவர் சேல்ஸ்மென்.
நாட்டில் மிக அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக விற்பனைத் துறை இருக்கிறது. எனினும், அந்தத் துறை முதிர்ச்சி அடையாததாக இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்கிறார் நூலாசிரியர். இந்தத் துறையில் கிட்டத்தட்ட பாதியளவு பேர் தங்கள் விற்பனை இலக்குகளை அடைய முடியாதவர்களாக இருக்கிறார்கள். இந்தத் துறையை விருப்பத் தேர்வாக எடுக்காதவர்களின் விற்பனை உத்தி, அணுகுமுறைதான் இதற்கு முக்கிய காரணமென்பது நூலாசிரியர் முடிவு. இதை எதிர்கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்பதை மனோதத்துவ ரீதியில் விளக்குகிறார்.
விற்பனை என்பது வெறும் கலையல்ல, விஞ்ஞானமும் அல்ல - அது இரண்டும் கலந்த 'கலைஞானம்' என்கிறார்.
'இந்த இன்டர்நெட் யுகத்தில் இன்னுமா சேல்ஸ்மென்?' என்று வேடிக்கையாகத் தொடங்கி, தற்கால விற்பனைத் துறை எப்படி மாறி வருகிறது என்று தெளிவாக விளக்குகிறார்.
ஒரு விற்பனையாளன் எப்படி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, எல்லா விற்பனைப் பிரதிநிதிகளும் பொதுவாக இழைக்கும் தவறுகள், உணர்ச்சிபூர்வமாக ஒரு பொருளை எவ்வாறு வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பது, வாடிக்கையாளரின் சந்தேகங்களை எப்படிக் களையச் செய்வது போன்றவை வசீகரமான மொழியில் விளக்கப்பட்டுள்ளன.
விற்பனைத் துறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.