
வெள்ளித்திரையில் விளையாட்டு - மணிகண்டன் தியாகராஜன்; பக்.120; ரூ.365; notion.press.com.
'விளையாட்டு என்பது வெறும் விளையாட்டல்ல; குழந்தைகளை இளம்வயது முதல் விளையாட்டில் ஈடுபடுத்தும்போது, அவர்கள் உடல் தகுதியுடன் ஒழுக்கமாகவும், தன்னம்பிக்கையுடனும் எதிர்காலத்தில் நிச்சயம் மிளிர்வார்கள்' என்று கூறும் நூலாசிரியர், விளையாட்டை அடிப்படையாக வைத்து வெளியான திரைப்படங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
முப்பது கட்டுரைகளை வெளியிட்டுள்ள அவர், அவற்றின் இறுதியில் வைத்துள்ள 'க்யூ.ஆர். கோட்'-ஐ கைப்பேசியில் ஸ்கேன் செய்தால், அந்தத் திரைப்படத்தைக் காணும் வசதியையும் ஏற்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
கிரிக்கெட், செஸ், மல்யுத்தம், ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்ஸ், கபடி, டென்னிஸ், பாட்மின்டன் போன்ற விளையாட்டுகள் குறித்த அறிமுகம், சாதனையாளர்கள் குறித்தும் இந்த நூலில் அறிய முடிகிறது. பல வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது, சோதனைகளே சாதனையாளர்களாக மிளிரச் செய்கிறது என்பதை உணரவைக்கிறது. விளையாட்டுகள் குறித்து கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களை ஒருசேர படித்தறியலாம்.
பிரபல வீரர்களின் வரலாற்றை சொல்லும் 'எம்.எஸ்.தோனி', 'மேரி கோம்', 'டங்கல்' (கீதா போகாட்), கபில்தேவ் நடித்த 'இக்பால்', கபடி குறித்த 'கென்னடி கிளப்' உள்ளிட்ட திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளும், தொடர்புடைய வீரர்களின் வாழ்க்கைச் சுருக்கமும் இருக்கின்றன.
'விளையாட்டுக்கு உலகையே மாற்றியமைக்கும் வல்லமை உண்டு' என்று கூறி தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ரக்பி விளையாட்டை ஊக்குவித்தது, ஊக்க மருந்து புகார்களால் விளையாட்டு வீரர்கள் எதிகொண்ட பிரச்னைகள், பல்வேறு விளையாட்டுகள் குறித்த சுவாரஸ்ய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.