அல்லூரி சீதாராம ராஜு

தேசப் பற்றாளர்கள் வாசிக்கத் தவறவிடக் கூடாத நூல் இது.
அல்லூரி சீதாராம ராஜு
Published on
Updated on
1 min read

அல்லூரி சீதாராம ராஜு- ச.வைரவராஜன்; பக்.160; ரூ.185; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4. ✆ 9289 281314.

1896-ஆம் ஆண்டு முதலே தேச பக்தர்கள் வரலாற்றைக் கொண்டு வந்து சுதந்திரப் போராட்டத்திலும் துணை நிறுவன அல்லயன்ஸ் நிறுவனத்தார் வெளியிட்டுள்ள சிறப்புமிக்க நூல்களில் இதுவும் ஒன்று. சுதந்திரப் போராட்டத்தில் எவராலும் மறக்கக் கூடாத தியாகிகளில் முக்கியமானவர் அல்லூரி சீதாராம ராஜு.

போராட்டக் களத்தில் சீக்கியர்களின் பங்களிப்பு, நாம்தாரி இயக்கத்தின் முக்கிய தலைவர்களான பிஷன் சிங், ஹீரா சிங், கியானி சிங், பாபா ராம்சிங் போன்றோர் ஆயுதப் போராட்டம், மலேர்கோட்லாவில் அந்த இயக்கத்தினர் பீரங்கிக் குண்டுகளால் கொல்லப்பட்டது போன்றவை 1850-ஆம் ஆண்டுகளிலேயே நிகழ்ந்தவை.

இதையறிந்த ஆந்திரத்தைச் சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு துறவியாக இருந்தபோதும், தேச விடுதலைக்காகப் போராட நினைத்தார். அவருக்கு மேற்கு வங்கத்தின் சுரேந்திரநாத் பானர்ஜியின் அறிமுகம், இமயமலையில் ஆன்மிகப் பயிற்சியும், போர்ப் பயிற்சியும் பெற்றது, குடும்பத்தினருக்காக ஆந்திரத்துக்குத் திரும்பி வருதல் போன்றவை படிக்கும்போதே வியப்படைய செய்கிறது.

பிரிட்டிஷ் காவல் துறையினருக்கும், அரசுத் துறையினரையும் 1922-24-ஆம் ஆண்டுகளில் தலைமுறைவாக இருந்து ராஜு போராடியது, காவல் துறையினரால் பிடிபட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, அவருக்கு மரணத் தண்டனை விதித்தது என்பதையெல்லாம் படிக்கும்போது வீரர்கள்

எத்தனை துயரங்களைச் சந்தித்துள்ளனர் என்பது கண்ணீரை வரவழைக்கிறது.

தேசப் பற்றாளர்கள் வாசிக்கத் தவறவிடக் கூடாத நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com