ஆர்ட்டிகிள் 370

சுதந்திரத்துக்குப் பிந்தைய வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்துள்ளது இந்நூல்.
ஆர்ட்டிகிள் 370
Published on
Updated on
1 min read

ஆர்ட்டிகிள் 370 - இந்தியாவின் காஷ்மிர்; ஆர்.ராதாகிருஷ்ணன்; பக். 200; ரூ.230; சுவாசம் பதிப்பகம்; சென்னை-127. ✆ 8148066645.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதிகளை வழங்கிவந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் 35(ஏ) ஆகியவை 2019, ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசால் திரும்பப் பெற்றப்பட்டன. அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ அனைவரும் ஓரளவு அறிந்திருந்தாலும், அது எந்தச் சூழ்நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்தது, அதை ரத்து செய்வதற்கான காரணங்கள் என்ன என்று தெளிவாக விளக்குகிறது இந்நூல்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது பெருவாரியான சமஸ்தானங்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இந்தியாவுடன் இணைந்தன. இணையாமல் முரண்டு பிடித்த மூன்றே சமஸ்தானங்களில் ஒன்று புவியியல்ரீதியாக வித்தியாசமாக அமைந்துள்ள காஷ்மீர். தனி நாடாகத்தான் காஷ்மீர் இருக்கும் என்று உறுதியாக இருந்த மன்னர் ஹரிசிங் மனதை மாற்றியது பதான் பழங்குடி படையினர் மூலம் பாகிஸ்தான் நடத்திய கொடூர தாக்குதல்.

காஷ்மீரை அழிவின் பிடியிலிருந்து காக்க இந்தியாவின் உதவியை நாடினார் மன்னர் ஹரிசிங். அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பல்வேறு ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

வரலாற்றுக் காலத்திலிருந்தே காஷ்மீர் சொர்க்க பூமிதான். ஆனால், இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் பாகிஸ்தானால் காஷ்மீரில் தொடங்கிவைக்கப்பட்ட துப்பாக்கிச் சப்தம் இன்றளவும் ஓயாமல் தொடர்கிறது. எவ்வாறெல்லாம் காஷ்மீர் பிரச்னை வளர்ந்தது, யார் யார் அதைத் திட்டமிட்டு வளர்த்

தார்கள் என அலசியுள்ள நூலாசிரியர், காஷ்மீர் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்க வேண்டும், அதற்கு இந்தியா என்னென்ன செய்ய வேண்டும் என்கிற யோசனைகளயும் முன்வைக்கிறார்.

சீனாவின் படையெடுப்பு, வங்கதேச யுத்தம், சிம்லா ஒப்பந்தம், காஷ்மீர் பண்டிட்டுகள் எதிர்கொண்ட துயரம் என சுதந்திரத்துக்குப் பிந்தைய வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்துள்ளது இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com