
விடுதலைப் போரில் சீர்காழி; எஸ்.இமயவரம்பன்; பக். 498; ரூ.500; காளான் பதிப்பகம், மயிலாடுதுறை - 609001 ✆ 96559 24925.
எந்த நாடுகளெல்லாம் தியாகிகளை மதித்துப் போற்றுகிறதோ அந்த நாடுகள்தான் வல்லரசுகளாகத் திகழ்கின்றன. அந்த வகையில், இந்தியாவின் மாபெரும் வரலாற்று நிகழ்வான விடுதலைப் போரில் சீர்காழியின் பங்களிப்பை பதிவு செய்வதே இந்நூலின் முதன்மை நோக்கமாகும்.
சீர்காழியை மையப்படுத்திய விடுதலைப் போர் குறித்த 85 நிகழ்வுகள், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாக வாழ்க்கை குறித்து தகுந்த ஆதாரங்களோடு இந்நூல் பதிவு செய்துள்ளது.
ஆவணங்கள் கிடைக்காததால் விடுபட்டுப்போன ஐஎன்ஏ தியாகிகள் பட்டியல், விதிகளைக் காரணம் காட்டி தியாகிகள் அலைக்கழிக்கப்பட்டது, தியாகளுக்கு ஓய்வூதியம் வழங்க தாமதம் உள்ளிட்ட அவலங்களையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.
'சீர்காழியில் நேதாஜி' என்ற தலைப்பிலான பதிவின்மூலம், நேதாஜியை நாட்டு மக்கள் எந்த அளவுக்கு நேசித்தனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சீர்காழியைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் வெள்ளையர்களை விரட்டப் போராடிய தியாகிகள் குறித்தும் இந்நூல் பதிவு செய்துள்ளது.
வஉசியின் கப்பல் கம்பெனி, நெல்லை சதி வழக்கு, சீர்காழி சதி வழக்கு, காந்தியின் அறப்போராட்டம், தமிழகத்தின் எல்லைப் போர், மொழிப் போர் உள்ளிட்ட போராட்டங்களில் நமது முன்னோர் தன்னலம் கருதாது ஈடுபட்டனர். அவர்களின் தியாகங்கள் இளைய தலைமுறையினரால் நினைவுகூரப்பட்டு போற்றப்பட வேண்டும் என இந்நூல் வலியுறுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.