நினைவுச் சுவடுகள் - பாலசுப்பிரமணியன் இராதாகிருஷ்ணன்; பக். 160; ரூ.150; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2434 2810.
அசோக் லேலண்ட் நிறுவனத்தில் ஊழியராகப் பணிக்குச் சேர்ந்த நூலாசிரியர், பணி ஓய்வு பெற்று 78-ஆம் வயதைக் கடந்துள்ளார். இவர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், ஆளுமைகள் என 44 கட்டுரைகளாகத் தொகுத்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர், வ.உ.சி., மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, அம்பேத்கர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன் என்று அரசியல், ஆன்மிகம், இலக்கியம், கலை, திரைத்துறை, விளையாட்டு, இசை, மருத்துவம் என்று பலதுறைகளில் தலைசிறந்த ஆளுமைகள் குறித்தும், அவர்கள் வாழ்வில் நடைபெற்ற ருசிகரங்களையும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
பாலம் கல்யாணசுந்தரம், நல்லி குப்புசாமி செட்டியார், டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன், பீட்டர் அல்போன்ஸ் போன்ற பிரபலங்களுடன் தனக்கு உள்ள தொடர்பையும், அவர்களின் சிறப்புகளையும், தான் பணியாற்றிய நிறுவனத்தின் வரலாற்றையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மே தினம், விவசாயச் சட்டங்கள், ரயில்வே துறையில் தமிழர்களுக்குத் தேவை முக்கியத்துவம், திருச்சூரில் "இந்தியா 75' மாநாட்டின் முக்கியத்துவம் போன்ற கட்டுரைகள் பல தகவல்களை அறிய வைக்கின்றன.
சுதந்திரத்துக்குப் பின்னரான இந்தியாவை இளைய தலைமுறையினருக்கு இந்நூல்அறிய உதவும். படிக்கவும், பரிசளிக்கவும் உகந்த சிறந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.