சே குவேரா (கியூபா விடுதலைப் போராட்டம்)

கியூபாவின் புரட்சியுடன் இணைந்த சே குவேராவின் வரலாற்றை அறிய உதவும் நூல்.
சே குவேரா (கியூபா விடுதலைப் போராட்டம்)
Updated on
2 min read

சே குவேரா (கியூபா விடுதலைப் போராட்டம்) - எழில்முத்து; பக்.176; ரூ. 200, சத்யா என்டர்பிரைசஸ், சென்னை - 94; ✆ 044 - 4507 4203.

கியூபாவின் தொடக்க கால வரலாற்றுப் பின்னணியில் தொடங்கி, புரட்சி வீரர் ஹொúஸ மார்த்தியைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன் சே குவேராவின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆர்ஜென்டீனாவில் பிறந்தவரான சேயின் குடும்பப் பின்னணியே அவருடைய எதிர்காலத்தைக் கணிக்கக் கூடியதாக இருந்தது. தந்தை எர்னஸ்டோ குவேரா லிஞ்ச் இடதுசாரி ஆதரவாளர், நாஸி எதிர்ப்பாளர். குடும்பச் சூழலே அவருக்கு அரசியலைக் கற்பித்தது.

சேயின் மோட்டார் சைக்கிள் பயணம் பற்றியும் குறிப்புகள் பற்றியும் விவரிக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக அவர் பதிவு செய்திருக்கும் பயண அனுபவங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

மெக்சிகோவில் கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவுடன் சே குவேராவுக்கு நட்பு ஏற்பட்டதும் பின்னர் அதுவே வளர்ந்து கியூப புரட்சியின் தோழர்களானதும் பற்றியுமான நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொரில்லா போரில் சாகசங்கள், கியூப புரட்சியிலும், வென்றெடுத்த கியூப அரசிலும் சே குவேராவின் பங்களிப்புகள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் காங்கோ செயல் திட்டத்தில் சே குவேராவின் பங்கேற்பும் கூறப்படுகிறது.

பொலிவியாவில் சே குவேரா சிறைப்பட்டதும் சுட்டுக்கொல்லப்பட்டதுமான வரலாற்றுடன் அவருடைய உடல் தொடர்பான மர்மங்களுடன் நூல் நிறைவு பெறுகிறது.

நூலில் எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்; துணை நூல்களின் பட்டியலையும் இணைத்திருக்கலாம். கியூபாவின் புரட்சியுடன் இணைந்த சே குவேராவின் வரலாற்றை அறிய உதவும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com