26. அன்னம் பாலிக்கும் - பாடல் 7

ஒருத்தன் என்பதன் மூலம் சிவபிரான் ஒப்பற்றவன் என்று அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார்.
Updated on
1 min read

பாடல் 7

ஒருத்தனர் உலகங்கட்கு ஒரு சுடர்
திருத்தனார் தில்லைச் சிற்றம்பலவனார்
விருத்தனார் இளையார் விடம் உண்ட எம்
அருத்தனார் அடியாரை அறிவரே

விளக்கம்

திருத்தன் = உயிர்களைத் திருத்தி ஆட்கொள்பவன். அருத்தன் = மெய்ப்பொருளாக உள்ளவன்.

ஒருத்தன் என்பதன் மூலம் சிவபிரான் ஒப்பற்றவன் என்று அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். ஒருவன் என்னும் ஒருவன் காண்க என்பது திருவாசகம், திருவண்டப்பகுதி அகவலில் வரும் வாக்கியம், ஒருவனாய் உலகேத்த நின்றவன் சிவபெருமான் என்ற செய்தியை, ஆரூர்த் திருத்தாண்டகம் ஒன்றின் முதல் அடியாக அப்பர் பிரான் வழங்குகின்றார். திருவாரூர்த் தலம் எத்தகைய பழமை வாய்ந்தது என்று இங்கே கூறப்படுகின்றது. தெரித்த என்றால் தோற்றுவித்த என்று பொருள்.

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே மூவுருவமான நாளோகருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ மான் மறிகை ஏந்தி ஓர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளோ

பொழிப்புரை

ஒப்பற்ற தலைவனாய் விளங்கும் சிவபெருமான், உலகங்களுக்கு ஒரு சுடராக உள்ளார். தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடும் அவர், உயிர்களை திருத்தி ஆட்கொள்ளும் கருணை உள்ளம் கொண்டவர்; அனைவருக்கு முதியவர்; அனைவரும் இறந்த பின்பும் தான் இறவாமல் இருக்கும் காரணத்தால், அனைவருக்கு இளையவர்; விடம் உண்டு தேவர்களையும் மற்ற உலகத்தவரையும் காப்பாற்றியவர். மெய்ப்பொருளாக உள்ள சிவபெருமான், தனது அடியார்களின் பண்பை உணர்ந்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com