124. வரமதே கொளா - பாடல் 5
By என். வெங்கடேஸ்வரன் | Published On : 22nd March 2019 12:00 AM | Last Updated : 22nd March 2019 12:00 AM | அ+அ அ- |

பாடல் 5:
காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல்
தோணி வண்புரத்து ஆணி என்பவர் தூமதியினரே
விளக்கம்:
காணி=நிலம்; ஒண்பொருள்=சிறந்த வழியில் ஈட்டிய செல்வம்; வண்புரம்=வளமை மிகுந்த நகரம்; தூமதி=தூய்மையான சிவஞானம். தோணிபுரம் என்ற பெயரின் இரண்டாவது எழுத்து ணி. இந்த எழுத்து இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது.
பொழிப்புரை:
நிலங்களையும் சிறந்த வழியில் ஈட்டிய பொருட்களையும் கற்றவர்களுக்கு கொடையாக கொடுத்து உதவும் நல்ல மனம் உடைய மனிதர்கள் விரும்பி வாழ்கின்றதும், அடியார்களுக்கு பல வகையிலும் நன்மை புரிவதும் ஆகிய வளமை மிகுந்த தோணிபுரத்தில் வீற்றிருப்பவன் சிவபெருமான்; அந்த பெருமானை மாற்றுரைக்கும் ஆணிப் பொன் போன்று உயர்ந்த அரிய பொருள் என்று சொல்லித் தொழும் அடியார்கள் தூய்மையான சிவஞானம் உடையவர்கள் அவார்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...