
ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில், நவம்பர் பன்னிரெண்டாம் தேதி தீபாவளி பண்டிகை 'கொலோன் வாழ் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தமிழர்களுடைய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதத்தில் சிலம்பாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்சிகள் அரங்கேற்றப்பட்டன. புலம்பெயர் வாழ்வில், கலாச்சார பண்டிகைகளின் தேவைகளை முன்னிறுத்தும் வகையில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வயது வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
குழந்தைகளுக்காக அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் உறுப்பினர்களின் பங்களிப்புடன், தமிழ்நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.