

நாட்டில் மூன்று தசாப்தங்களாக செயல்பட்டு வரும் சூப்பர்கேஸ் நிறுவனம், தற்போது தென்னிந்தியாவில் தனது மேம்பட்ட சேவையை விரிவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் தனது உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை இரட்டிப்பாக்கியுள்ளது.
தொழில்துறையின் மையமாகவுள்ள கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட எரிவாயு உருளை (சிலிண்டர்) நிரப்பும் ஆலை, சூப்பர்கேஸ் நிறுவனத்தின் மண்டல அளவிலான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. 50,303 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலை, விநியோகச் சங்கிலித் திறனை மேம்படுத்தும் வகையில், சூப்பர்கேஸ் நிறுவனத்தின் தூத்துக்குடி முனையத்துக்கு அருகில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு 51,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில், 2 x 125 மெட்ரிக் டன் எரிவாயு சேமிப்புக் கலன்கள் மற்றும் சிலிண்டர்களை விரைவாக கையாள்வதற்கான தானியங்கி அமைப்பு போன்ற மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கும், கேரளத்தில் திருச்சூர், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கும் கோவை ஆலையில் இருந்து விநியோகம் செய்யப்படும். இந்த ஆலை, அதிக தேவை கொண்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட விநியோக நம்பகத்தன்மையையும், குறைவான நேரத்தில் விநியோகத்தையும் உறுதி செய்கிறது.
இந்த நிறுவனம் திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கும் வகையில், நெல்லையில் 12 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட எல்பிஜி சேமிப்புக் கிடங்கிற்கு முதலீடு செய்துள்ளது.
”தென்னிந்தியாவில் எங்களின் இருப்பை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், கோவை ஆலையானது சூப்பர்கேஸ் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்” என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் சாங்கி தெரிவித்துள்ளார்.
மேலும், “எதிர்கால வளர்ச்சியை ஆதரிக்கும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலையான எரிசக்தியை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பையும், உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சூப்பர்கேஸ் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்
சூப்பர்கேஸ் நிறுவனத்தின் வலுவான மற்றும் சொந்த உள்கட்டமைப்பில், தற்போது 2 இறக்குமதி முனையங்கள், 16 நிரப்பு ஆலைகள், 4 கிடங்குகள், 600-க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்கள், 400-க்கும் மேற்பட்ட கிளைகள் (ஃபிரான்சீஸ்) அடங்கும்.
தமிழகத்தில் வடக்கால், தேர்வாய், ஸ்ரீபெரும்புதூர், மதுரை மற்றும் தற்போது கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நிரப்பு நிலையங்களையும், தூத்துக்குடியில் முனையத்தையும், புதுவை மற்றும் நெல்லையில் கிடங்குகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான வலையமைப்புடன் இயங்கி வருகிறது.
கூடுதலாக, இந்நிறுவனம் கிளை உரிமையாளர்கள் (ஃபிரான்சீஸ்) மூலம், தனது ஆட்டோ எல்பிஜி விநியோக நிலையங்களை விரிவுபடுத்தி, சுத்தமான ஆட்டோமோட்டிவ் எரிபொருளை ஊக்குவித்து வருகிறது.
கூட்டாண்மை வளர்ச்சி
தென் இந்தியாவில் வலிமையான உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமைந்து, ஆற்றல்மிக்க ஃபிரான்சீஸ் கூட்டாளிகளின் வலையமைப்பை ஈர்த்துள்ளது. உள்ளூர் கிளை உரிமையாளர்கள், கடைநிலை விநியோகத்தை வாடிக்கையாளர்களுக்கு அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை உறுதி செய்வதில் மிகவும் முக்கியமானவை. நன்கு நிறுவப்பட்ட வசதிகளும் தொடர்ச்சியான விநியோகமும், சூப்பர்கேஸ் உடனான எல்பிஜி டீலர்ஷிப்பை இப்பகுதியில் உள்ள பல ஃபிரான்சீஸ் உரிமையாளர்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் நிலையான தேர்வாக மாற்றியுள்ளது.
சூப்பர்கேஸ் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் கேரளத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோரைத் தங்களின் விரிவடைந்து வரும் வலையமைப்பில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு செயல்பாட்டிலும் வாடிக்கையாளர்களை மையமாக வைத்து, தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல், ஆட்டோமேஷன், புதுமை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் தொலைநோக்குப் பார்வையுடன் சூப்பர்கேஸ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. வாடிக்கையாளர் அனுபவம் தொடர்பான பல புதிய முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், 'தீப்பிழம்புகளையும் தாண்டிய அக்கறை' (Caring beyond Flames) என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அலுவலக ஊழியர்களும், விற்பனைக் குழுவினரும் தொடர்ந்து வாடிக்கையாளர்களையும், வருங்கால வாடிக்கையாளர்களையும் சந்திக்கின்றனர். வலுப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் விரிவடைந்து வரும் கூட்டாண்மைகளுடன், அடுத்த பல தசாப்தங்களுக்கு தென் இந்தியாவின் வளர்ச்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இந்த நிறுவனம் சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
Ph: 7075589400 | WhatsApp: 9100489737
About SUPERGAS - https://youtu.be/6bsh6s83EDQ?si=hWF5xSMCx7USoVvr
To Partner with SUPERGAS - https://www.supergas.com/become-a-partner/cylinder-franchisee
For Industrial LPG- https://www.supergas.com/for-industrial
LinkedIn - https://www.linkedin.com/company/supergasshvenergy
பொறுப்புத் துறப்பு: வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலான செய்தி இது. செய்தியிலுள்ள தகவல்கள் / விஷயங்களில் ‘தினமணி’க்கு எவ்விதப் பொறுப்புமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.