சாமானியனும் சரித்திரமாகலாம்...

அஸ்வின்ஸ் ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் வெற்றி பற்றி..
சாமானியனும் சரித்திரமாகலாம்...
Published on
Updated on
4 min read

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை.

அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது. 0

- கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில்.

தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூரில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட ஒரு நிறுவனம், இன்று ஆகாய விமானத்தில் பறந்து ஆர்ப்பரிக்கும் அதிசயங்களை நிகழ்த்துவது என்பது ஒரே நாளில் நிகழ்ந்ததல்ல.

பெரம்பலூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமங்களில் ஒன்றான கடம்பூரில் ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து, பரந்த வானமே எல்லை என்று புறப்பட்ட, 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு எளிய மனிதரின் சீரிய பயணம் இன்று பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை கட்டமைத்துக்கொண்டிருக்கிறது என்பதும் மிகையல்ல.

ஆம்..! அந்த நிறுவனம் அஸ்வின்ஸ் ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ். அந்த மனிதர் அந்நிறுவனத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான திரு.K.R.V.கணேசன்.

திரைப்படங்களில் ஒரு பாடலில் வெற்றிகரமான தொழிலதிபராக உயரும் காட்சிகளை பார்த்திருப்போம். நிஜ வாழ்க்கையில் சாத்தியமற்ற அந்த வளர்ச்சியை ஸ்லோமோஷனில் 25 ஆண்டுகளின் உழைப்பை கலந்துகொடுத்தால், அதுதான் அஸ்வின்ஸ் ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி.

பெரம்பலூரில் K.R.V.கணேசன் அவர்களால், அஸ்வின்ஸ் என்ற பெயரில் முதலில் தொடங்கப்பட்ட உணவகம் வெற்றிகரமாக அமையவில்லை. சுற்றத்தார் அவநம்பிக்கையை விதைத்தனர். ஆனால் அவர் மனம் தளரவில்லை. அவரது வேட்கையும் தணியவில்லை.

மனைவியுடன் சேர்ந்து வீட்டிலேயே சமோசா, தட்டை, அச்சுமுறுக்கு என தயாரித்து, சைக்கிளில் கடைகடையாய் போடத் தொடங்கினார்.

பின்னர் முதல்முதலாக எந்தப் பெயரில் தொழில் தொடங்கி தோல்வியடைந்தாரோ, அந்த பெயரிலேயே மீண்டும் அதே தொழிலையே தொடங்கி வெற்றிகரமாக நடைபோடுவதன் மூலம் தன் மீதான மற்றவர்களின் அவநம்பிக்கையை உடைத்தெறிந்துள்ளார்.

அவரிடம் இருந்த அசாத்திய உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு ஆகியவையும், அவரது தயாரிப்புகளில் இருந்த தரம், சுவை, சுத்தம் ஆகியவையுமே இன்று அஸ்வின்ஸ் ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் என்ற பெருநிறுவனமாக விரிவடைந்துள்ளதற்கு ஆணிவேராக இருந்துள்ளன.

பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தில் இன்று தமிழகம், புதுச்சேரியில் 40-க்கும் மேற்பட்ட கிளைகள்; சில இடங்களில் உணவகங்கள்; 1,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்; 200 வகையான உணவுப் பொருள்கள் தயாரிப்பு; தற்போது சிங்கப்பூர், அமெரிக்கா, விரைவில் கனடா, நெதர்லாந்து, சிங்கப்பூர், துபைய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி. இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணங்கள் என்ன? சற்று விரிவாகவே பார்ப்போம்.

ஆலைக்கான நிபந்தனைகள் ஊழியர்களாக இருந்தாலும், விருந்தினராக இருந்தாலும் அஸ்வின்ஸ் நிறுவனத்தின உணவுப் பொருள்கள் உற்பத்தியாகும் தொழிற்சாலைக்குள் நுழையும் அனைவரும் தூய்மையே பேண வேண்டும் என்பது பிரதான நிபந்தனை.

ஊழியர்களுக்கு நுழைவு வாயிலிலேயே முதற்கட்ட சோதனையுடன் தொடங்குகிறது தூய்மைக்கான நடவடிக்கைகள். பெண் ஊழியர்கள் எனில் அலங்காரத்துக்காக அணியப்படும் அதிகப்படியான அணிகலன்களை கழற்றி வைத்துவிட்டு நுழைவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆண் ஊழியர்களுக்கு கிளீன் ஷேவ் அவசியம். அதற்காக நுழைவு வாயில் அருகிலேயே நிறுவனம் சார்பில் இலவசமாக முடி திருத்தகம் செயல்படுவது ஆச்சர்யம். அடுத்ததாக, விரல் நகங்கள் சீராக உள்ளனவா, தலையில் கவசம் ஒழுங்காக அணிந்துள்ளனரா என சோதனை செய்யப்படுகிறது.

இத்தகைய சோதனைகளுக்குப் பிறகு ஊழியர்கள் அணிந்துவரும் காலணிகளை அவற்றுக்கான தனி ஸ்டாண்டில் கழற்றிவிட்டு, சானிடைசரால் கைகளை தூய்மைப்படுத்திக்கொண்டு, உள்ளே நுழைகின்றனர். காலணி அணிந்துதான் பணி செய்ய வேண்டும் என்பது போன்ற இடங்களில் பணியாற்றுபவர்களுக்கு நிறுவனமே உள்ளே காலணிகளை வழங்குகிறது. இவற்றை தாண்டி ஆலைக்குள் நுழையும் ஊழியர்களுக்கு அவரவர் செக்ஷன்களில் மீண்டும் ஒருமுறை அதே சோதனை நடத்தப்படுகிறது.

தொடர்ந்து, இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஊழியர்கள் அனைவரும் “சுவை நமதே, சுத்தம் நமதே, சுற்றம் நமதே!” என்ற பொருண்மையில் தூய்மை, பணியில் நேர்மை, இன்முகத்துடன் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் சமையலறை உறுதிமொழி ஏற்ற பிறகே பணி தொடங்குகிறது. தொழிற்சாலையின் தூய்மை தொழிற்சாலையில் ஊழியர்கள், இயந்திரங்கள், உணவு தயாரிப்பு மூலப் பொருள்கள், உற்பத்தி பொருள்கள் என அனைத்திலும் தூய்மையையும், தரத்தையும் உறுதிப்படுத்துவதற்காக, ஆலையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக தரக் கட்டுப்பாட்டாளர்கள்(Quality Controllers) நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மேற்பார்வையில், தினமும் உற்பத்தி தொடங்கும் முன்பு உணவு தயாரிக்கும் பாத்திரங்கள், இயந்திரங்கள் என அனைத்தும் தூய்மையாக இருக்கின்றனவா என சோதனை செய்யப்படுகிறது.

இதுதவிர காலை, இரவு என இருவேளைகளும் உணவுக் கூடம் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. மேலும், மாதம் ஒரு நாள் தொழிற்சாலைக்கு விடுப்பு அளிக்கப்பட்டு, தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மூலப் பொருள்களின் தரம் உணவு தயாரிப்புக்கான மூலப் பொருள்கள் எங்கு தரமாக கிடைக்கும் என்பதை தேடிச் சென்று வாங்குவதில் தொடங்கி, அவை தொழிற்சாலைக்குள் நுழையும்போது ஏற்கெனவே அவர்கள் அளித்த சாம்பிளுடன் ஒத்துப்போகின்றனவா என சோதனை செய்வது வரை தொடக்கத்திலேயே தரத்தை உறுதிப்படுத்துவதில் இந்த நிறுவனத்தின் விருப்பம் தெளிவாகிறது.

தொடர்ந்து, மூலப் பொருள்களின் தரத்தை நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் சோதனை செய்தபிறகே ஆலைக்குள் நுழைய அனுமதியளிக்கப்படுகிறது.

அதேபோல, அந்த மூலப் பொருள்களை பாதுகாக்கும் கிடங்கிலும் தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அங்கு எந்த வெப்பநிலையில் எந்தப் பொருள் பாதுகாக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, தினமும் இருமுறை அதே வெப்பநிலையில் இருக்கிறதா என்பது சோதனை செய்யப்படுகிறது.

அடுத்ததாக, தேவையான மாவுப் பொருள்கள் அனைத்தும் இங்கேயே அரைக்கப்பட்டு தயாராகின்றன. அரைவைக் கூடத்தில் பொருள்கள் அரைந்துகொண்டிருக்கும்போதே சரியான அரைவை பதம் என்ன என்பது கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆரம்ப காலக்கட்டங்களில் இருந்து தற்போது வரை தூய்மையை பேணுவதற்காக மாவு பிசைவது முதற்கொண்டு அனைத்துக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு, உணவு தயாரிக்கும் பொருள்களின் கலவை விகிதம் மாறுபட்டால், சுவையும் மாறுபட்டுவிடும் என்பதற்காக, கலக்க வேண்டிய சரியான விகிதத்தில் பிரிக்கப்பட்டே உணவுக் கூடத்துக்கு பொருள்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. அங்கு உணவு தயாரிக்கப்படும்போது, இனிப்பு, காரம் என எந்தெந்த பொருளுக்கு எந்தெந்த வெப்பநிலையில் அடுப்பு எரிய வேண்டும் என்பதற்கான நிபந்தனைகள் கவனமாக பின்பற்றப்படுகின்றன.

மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் தரமான கடலை எண்ணெய் (கண்டிப்பாக பாமாயில் கிடையாது) மட்டுமே உணவு உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. அந்த எண்ணெயும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தரக்கட்டுப்பாட்டு குழு.

உணவுப் பொருளின் சுவை இத்தனை செயல்பாடுகளை கடந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் சுவை, தரம் ஆகியவற்றில் எவ்வாறு இருக்கின்றன என்பது மீண்டும் நிறுவன உரிமையாளர்களாலேயே சோதனை செய்யப்படும். அவர்களுக்கு சுவையிலும், தரத்திலும் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஆலையில் இருந்து கடைகளுக்கு அந்த உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூரில் தயாராகி மற்ற இடங்களில் உள்ள கடைகளுக்கு உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்படுவதுடன், ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களை அந்தந்த கடைகளிலேயே தயாரிக்கும் வசதியும் உள்ளது. தூய்மையை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அனைத்து உணவுப் பொருள்களும் பேக் செய்யப்பட்டே கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு நைட்ரஜன் பேக்கில் அனுப்பப்படுகின்றன. FSSAI version 6 தரச் சான்றிதழ், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான FDI சான்றிதழ்,

APEDA சுகாதாரச் சான்றிதழ், முட்டை கலந்த பேக்கரி பொருள்களுக்கு HALAL முத்திரை என விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கும் செயல்பாடுகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

கடைகள், உணவகங்களில்...

கடைகள், உணவகங்களில் தினமும் தூய்மைப்படுத்துதல், இன்முகத்துடன் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதை சோதனை செய்வதற்காகவே தனிக் குழுவினர் ஒவ்வொரு கடையாக திடீர் பயணம் மேற்கொள்கின்றனர்.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு எது தேவையோ, அதை அவர்களிடம் இருந்தே தெரிந்துகொள்ள விரும்புகிறது நிர்வாகம். அதற்காக, வாடிக்கையாளர்களின் புகார்களை மனமுவந்து வரவேற்கும் நிர்வாகம், அந்த குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

அஸ்வின்ஸ் ஷ்பெஷல் சுவை, சுத்தம், வாடிக்கையாளர் சேவை என்பதையே தாரக மந்திரமாக கொண்டிருக்கும் அஸ்வின்ஸ் நிறுவனத்தில் பாரம்பரியமாக நாம் வீடுகளில் தயாரிக்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உதாரணமாக, விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை, கிருஷ்ண ஜெயந்திக்கான பட்சணங்கள் என அஸ்வின்ஸ் ஹோம்லி ஸ்பெஷல் தயாரிப்புகளுக்கு வெளிமார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் அதிகம். இதன் மூலம் எப்போதும் புதுப்புது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி ரென்ட்செட்டராக இருக்கவே விரும்புகிறது அஸ்வின்ஸ் நிர்வாகம்.

ஊழியர்களின் நலன்கள் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய மாவட்டத்தில் அடித்தட்டு மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூரில் தலைமையிடம் அமைந்திருப்பதற்கு பிரதான காரணமாக இருக்கிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அரசு விதிகளின்படி, பிஃஎப் உள்ளிட்ட அனைத்து நலன்களும் வழங்கப்படுகின்றன. வெளியூர்களில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இன்னும் அதிக எண்ணிக்கையில் கிளைகளை திறக்க வேண்டும் என்பதைவிட, அனைத்து கிளைகளிலும் அதே தரம், அதே சுவையுடன் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்பதுதான் அஸ்வின்ஸ் நிறுவனத்தின் தீரா வேட்கையாக இருக்கிறது.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருக்க வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

அதையே தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கும் ஒரு எளிய மனிதரின் வெற்றி இன்னும் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே இருக்கும் என்பதே நிதர்சனம்.

பொறுப்புத் துறப்பு: வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலான செய்தி இது. செய்தியிலுள்ள தகவல்கள் / விஷயங்களில் ‘தினமணி’க்கு எவ்விதப் பொறுப்புமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com