தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் பெரம்பலூர் - திருச்சி

30 ஆண்டுகளாக கல்வி சேவை அளிக்கும் தனலட்சுமி சீனிவாசன் குழுமம்..
தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் பெரம்பலூர் - திருச்சி
Published on
Updated on
6 min read

தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் முதல் நிறுவனம் 1994-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில்  நிறுவப்பட்டது. மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், செவிலியர், மருந்தியல் சார்ந்த சுகாதார அறிவியல், ஆசிரியர் கல்வி மற்றும் பள்ளி ஆகிய துறைகளில் தரமான கல்வியை ஊக்குவித்து புதுமையான தொழில்நுட்பத்துடன் பசுமையான சூழலில் வழங்கி வருகிறது. தொடக்கத்தில் இருந்து, அனைத்து நிறுவனங்களும் கற்றல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான உலகத்தரம் வாய்ந்த நோடல் மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனங்கள் தொழில்முறை, உலகளாவிய கண்ணோட்டம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்வதின் மூலமும் அனைத்து துறைகளிலும் தரமான கல்வியைத் தொடர்ந்து வழங்குவதின் மூலமும் 'சிறந்த நிறுவனம்' என்ற அங்கீகாரத்தை அடைந்திருக்கிறது. அனைத்துக்கும் முத்தாய்ப்பாக  2021 ஆம்   கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டின் முதல் தனியார் பல்கலைக்கழகம் என்கின்ற அந்தஸ்த்தை பெற்ற  கல்வி நிறுவனம் நம் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம். இத்தகைய இமாலய சாதனையை படைத்தவர் நம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ.சீனிவாசன்.

கல்வி அறிவு என்பது நல்ல  சமுதாயத்தை உருவாக்கும் கருவியாகும். நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி அளிக்கும் பாதையில் இந்தியா முன்னேறி வருகிறது. தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உயர் கல்வியைத் தொடர ஒரு வாய்ப்பை வழங்குவது முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உயர் கல்வியின் தற்போதைய சூழ்நிலையில், தொழில்நுட்பம், படைப்பாற்றல், மென் திறன்கள் மற்றும் நெறிமுறைகளுடன் அறிவியல் அறிவைப் புகுத்துவது உயர்கல்வியின் தரமான உ்ள்கட்டமைப்பு வசதியுள்ள கல்வி நிறுவனங்கள்  மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் வெளிநாட்டில் உள்ள தொழில்நுட்பத்துடன் போட்டி போடுவதாகவும் அதனை விஞ்சுவதாகவும்  இருந்து வருகிறது. இதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள மதிப்புமிக்க மற்றும் சிறந்த பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு  பல்வேறு வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தல், மேலும் அங்குள்ள  உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தனலட்சுமி சீனிவாசன் நிறுவனங்கள், தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் இருக்கும், பல்வேறு சமூகப் பொருளாதார மற்றும் கலாசார பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு, அவர்களின் கனவுகளைத் தொடரவும், அதை அடைவதற்கான சூழலையும்  வழங்கி வருகிறது.

கல்விச் சூழல், பாடத்திட்டம், கற்பித்தல், ஆசிரியர்கள், ஸ்மார்ட் - வகுப்பறைகள், ஆய்வகங்கள், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் சமகால முதல்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக வளாகத்தை வடிவமைப்பதுடன்  அவற்றின்  பாதுகாப்பிற்கு,  உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனங்கள், மாணவர்கள் எதிர்காலத்தில் தொழில்முனைவோராக மாறுவதோடு நில்லாமல், மாணவர் ஆர்வலர்கள், சிறந்த பெற்றோர்கள் மற்றும் எதிர்கால சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்மொழிகின்றன. மேலும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் அதிக சம்பளத்துடன் பல்வேறு மதிப்புமிக்க நிறுவனங்களில் வளாக நேர்காணலின் மூலம்  தேர்ச்சி பெற்று உலகின் அனைத்து இடங்களிலும் பறந்து விரிந்து தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் பெயரை முத்திரை பதித்து வருகின்றனர். இக்கல்வி குழுமத்தில் தேர்ச்சி பெறும் ஒவ்வொரு மாணவரும், சமுதாயத்தை வலுப்படுத்துவதற்கும், மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான வாழ்க்கையை தனக்கென செதுக்குவதற்குமான தனது முழு திறனையும் அடைந்திருப்பார்கள்.

நமது தலைவர் சீனிவாசன் உலக அரங்கில் தரமான தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தி சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தரமான கல்வி சென்றடைவதை உறுதி செய்கிறார். குழந்தைகளின் கல்வி சமூகத்தில்  பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்து வருகிறார், எனவே தான் மகளிர்க்கென தனிக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு பொருளாதார  ரீதியாக நலிவடைந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி  பெண் குழந்தை கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

அ.சீனிவாசன் சாமானிய குடும்பத்தில் இருந்து வந்து, சரித்திரத்தில் இடம் பிடித்து  மற்ற மனிதர்களின் வாழ்க்கையில் நேர்மறை சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். 

தனலட்சுமி சீனிவாசன் குழுமம் பெரம்பலூர் நகரத்தை இந்திய வரைபடத்தில் மட்டுமல்ல, உலக வரைபடத்திலும் உறுதியாகவும் நிரந்தரமாகவும் பொறித்துள்ளது. அவரது சேவை மனப்பான்மையும், சமுதாயத்தை மேம்படுத்தும் உயரிய எண்ணமும் உன்னத நோக்கங்களாக இருப்பதால், அவர் தான் பிறந்து வளர்ந்த  பெரம்பலூரைத் தேர்ந்தெடுத்து, தனது தொலைநோக்குப் பார்வை மற்றும் செயல்பாடுகள் மூலம் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் மேம்படுத்தி வருகிறார். அவரின் அளப்பரிய முயற்சியும், தொடர் உழைப்பும் தான் குழுமத்தின் அபரிமிதமான எழுச்சிக்குக் காரணம். அவர் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை நிறுவி, வாழ்க்கையில் முன்னேற விரும்பும் இளைஞர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

30 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட  கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களாக தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம்  வளர்ச்சியடைந்துள்ளது. இந்த  கல்வி நிறுவனங்களுடன், பல்கலைக்கழகம், மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், புதுப்பிக்கதக்க எரிசக்தி ஆற்றல் உற்பத்தி, உயிரி ஆற்றல் உற்பத்தி, நிதி நிறுவனங்கள், சிட்  பண்ட்ஸ், சர்க்கரை ஆலைகள், நட்சத்திர ஹோட்டல்கள், கட்டுமானம், இன்சூரன்ஸ், பால் பண்ணை, போக்குவரத்து மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்கள் பல  வேரூன்றி விருட்சமாக வளர்ந்து வருகின்றன.

தற்போது, தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தில் சுமார் 30,000 மாணவர்கள் கல்வி சார் பலன்களைப் பெற்று வருகின்றனர். அவர்களில், 35% மாணவர்கள் மிகப் பாதுகாப்பான விடுதி வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 150 பேருந்துகள் இலவசமாக உயர்தர கட்டமைப்புடன் மாணவர்களின் பயணத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கூறியவற்றைத் தவிர, வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டண  சலுகைகளும்  வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த  கல்வி ஆண்டில்  மட்டும் தனலட்சுமி சீனிவாசன் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக சுமார் 1.5 கோடி அளவிற்கு மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்:

·         கல்வி சேவையில்  30 ஆண்டுகளுக்கும் மேலாக  சிறப்பான முறையில்  செயல்பட்டு வருகின்றது .

·         LKG முதல் MBBS MD வரை அனனத்து படிப்புகளும் ஒரே இடத்தில் சிறப்பாக பயில கூடிய இடமாக திகழ்கின்றது

·         சுமார் 30,000-க்கும் மேற்பட்ட  மாணவர்கள் 5,000 க்கும் மேற்ப்பட்ட  ஊழியர்கள் கொண்ட மிக பெரிய சாம்ராஜியமாக திகழ்கின்றது.

·         அதிநவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த  மருத்துவமனையுடன் கூடிய மூன்று  தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

·         தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைகளில் 160-க்கும் மேற்பட்ட சிறுநீரக மற்றும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .

·         இந்த மருத்துவமனைகளில் மாதத்திற்கு 3 ஆயிரம் சுழற்சி முறையில் 24 மணி நேர டயாலிசிஸ் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

·         பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக சுமார் 2,500-க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தின் சுகாதார வளர்ச்சி குறியீடு அதிகரித்துள்ளது.

·         மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

·         பெரம்பலூர் மாவட்ட மக்கள் அவசர மருத்துவ தேவைக்கு சென்னை , கோவை  போன்ற  பெருநகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலையை மாற்றி, அனைத்து மருத்துவ வசதிகளையும் பெரம்பலூரிலேயே ஏற்படுத்தி கொடுத்தவர் அ.சீனிவாசன்.

·         3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளில் தினமும் 3000-க்கும் மேற்பட்ட  புறநோயாளிகள்  சிகிச்சை பெற்று வருகின்றனர்

·         நிதி நிறுவனங்கள், சர்க்கரை  ஆலைகள் , கட்டுமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் , பார்மா  மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ட்ரான்ஸ்போர்ட்  முதலிய நிறுவனங்களை  ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளார்.

·         150 ஏக்கரில் இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, மரம் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் மறு சுழற்சி போன்றவற்றில் அலாதி ஆர்வம் உடையவர். அத்தோடு இல்லாமல் தாமே முதல் நபராக அனைத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி தான் மட்டுமல்லாமல் இந்திய இளைய சமுதாயத்தையும் இதில் ஈடுபடுத்தி வெற்றி கண்டவர்.

·         தன்னுடைய நிறுவனங்களில் பணிபுரியம் கடைநிலை ஊழியர்களுக்கென  தன் சொந்த செலவில்  வீடுகள் கட்டி கொடுத்தவர். இப்பசுமை  வீடுகளால் தமிழக வீட்டுவசதி வாரியத்தால் பாராட்டும்  பெற்றவர். மேலும்  தமிழகத்தில் ஒரே  இடத்தில் இவ்வளவு பசுமை  வீடுகள் கட்டப்பட்டது  இவரால் மட்டுமே.

·         மேலும்  தன்னுடைய மாவட்டத்தில் உள்ள நீர்வழி ஆதாரங்கள்  மற்றும் நீர்வழி தடங்களை  மீட்டெடுத்ததில்  முக்கியப் பங்கு  இவருடையது. நீண்ட வருடமாக முறையாக  தூர்வாரப்படாமலும் பல ஆக்கிரமைப்புகளாலும் பராமரிப்பு இன்றி தடைபட்டு கிடந்த நீர்வழி பாதைகளில் குடிமராமத்து பணிகளை செம்மையாக மேற்கொண்டு சுமார் 32 கிலோமீட்டர் நீளமுடைய நீர்வழி தடங்களை மீட்டெடுத்து  புதிய சாதனை படைத்தார். மேலும் நமது பாரத பிரதமரால் ஏற்படுத்தபட்ட ஜல்சக்தி அபியான் திட்டத்திலிருந்து வந்த குடிமை பணி அதிகாரிகளால் நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மிகவும் வியந்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும் இதுபோன்றதொரு பணிகளை மேற்கொள்ள ஆவண செய்ய வலியுறுத்தி சென்றனர். 

·         பல கிராம கோயில்களை புனரமைத்து சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் செய்து முடித்துள்ளார்.

·         பல  ஏழை எளிய மாணவர்களின் கல்வி தரத்தை  உயர்த்தி அவர்களின் வாழ்க்கையில்  தீப ஒளியை ஏற்றியுள்ளார்.

·         கட்டந்தரையாக இருந்த  பெரம்பலூர்  மாவட்டம் இன்று கல்வி வளர்ச்சியிலும், தொழில்  வளர்ச்சியிலும் பல  முன்னேற்றங்களை கண்டுள்ளது என்றால் இவரது  பங்களிப்பு இல்லாமல் அது சாத்தியப்படாது.

·         75 வருட இயற்கை விவசாய அனுபவத்தில்  நீர் மேலாண்மை மூலம் மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமானவர். ஒரு லட்சம் மரங்கள் நிறைந்த பசுமையான சூழலில் பல்கலைக்கழக வளாகம் பல லட்சம் பறவைகளின் சரணாலயமாக திகழ்கின்றது.

·         அனைவரும் எளிய முனறயில் அணுகக்கூடிய மிக எளிய மனிதர் தேசத்தந்தை  மற்றும் அப்துல்கலாம் அய்யா கண்ட புதிய பாரதம்  படைப்போம்  என்ற கனவு கொள்கையை  நிறைவேற்றிட  அயராது  உனழக்கும் இந்த 83 வயது இளைஞர், எங்களின் வழிகாட்டியாகவும், அடையாளமாகவும்  உலக அளவில் திகழ்கின்றார் என்றால் அது மிகையல்ல.

·         இவரின் இந்த மாபெரும் சாதனனகளுக்கு காரணம்  இவரின் வெற்றி மந்திரமான முன்னேறு முன்னேற்று என்பதாகும். எந்தவொரு செயலையும் முனைப்புடன் சரியாக செய்தால் வெற்றியை சாத்தியபடுத்தலாம் என்பது இந்த மந்திரத்தின் வழியே தெரிந்துக் கொள்ளலாம்

·         இவரின் மாபெரும் கல்வி சேவையினை பாராட்டி புதுகோட்டை  இலக்கிய மன்றம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது.

·         மேலும்  திருச்சி அண்ணா தொழில்நுட்ப  கழகம், இவரின் சிறந்த பங்களிப்பிற்காக, இவரை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழுவின் உறுப்பினராக மேதகு டாக்டர் சுர்ஜித்சிங் பர்னாலா கவர்னாக உள்ளபோது அளித்தது.  

·         TIMES OF INDIA –இவரின் கல்வி சேவையை பாராட்டி  BLAZER AWARD வழங்கி கௌரவித்துள்ளது.

·         சர்வதேச  ரோட்டரி 3000 சங்கம் இவருக்கு மற்றுமொறு  வாழ்நாள் சாதனனயாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

·         நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பாக தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்த்தை வழங்கி கௌரவித்துள்ளது

·         துபையில் நடைபெற்ற இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிராட் காஸ்ட் இன்ஜினியரிங் கண்சுல்டன்ட் இந்தியா லிமிடெட் அப்சர்வர் டவன் என்ற மாத இதழ் நடத்திய உச்சி மாநாடு மற்றும் விருதுகள் 2022 விழாவில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது

·         டைம்ஸ் ஆப் இந்தியா, பொறியியல் கல்லூரியின் உச்சபட்ச பங்களிப்பினை பாராட்டும்  விதமாக EDUICON விருதினை  வழங்கி கௌரவித்துள்ளது.

·         30 வருட கல்வி சேவையை பாராட்டி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அவர்களுக்கு திருச்சி ஜமால் முகமது கல்லூரி சார்பாக 2024 ஆண்டிற்கான ஜமாலியன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

·         தென்னிந்திய கரும்பு மற்றும் சர்க்கரை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் சார்பாக 2022 -2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழில்நுட்ப திறன் விருதினை கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பசவேஷ்வர் சுகர் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விருதினை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் பெற்று கொண்டார்.

·         நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பாக 2024 ஆம் ஆண்டு தனலட்சுமி சீனிவாசன் குழும மருத்துவமனைகளுக்கு பெரம்பலூர் மற்றும் திருச்சி பகுதிகளில் குறைந்த செலவில் நிறைவான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது என்ற விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

·         மேலும் இவர் தன்னுடைய நிறுவனங்களில் பணிபுரியும் பத்து பேருக்கு தலா ஒரு கோடியே பத்து லட்சம் செலவில் மொத்தம் பதினோரு கோடி செலவில் ஐந்து சென்ட் நிலத்தில்  இரண்டு படுக்கை மற்றும் அதி நவீன வசதிகளுடன் கூடிய 11 வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்.

·         மருத்துவ பராமரிப்பில் புதிய விடியலாக, எதிர்கால பராமரிப்புக்கான தொலைநோக்கு பார்வையுடன் மெட்ரோ நகரத்தில் (சென்னையில்) தனது புதிய பல்நோக்கு மருத்துவமனையைத் தொடங்கியுள்ளது.

·         தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் மற்றுமொரு அங்கமாக செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை தன் வசப்படுத்தியுள்ளது.

 மாண்பமை வேந்தரின்  பொன்மொழிகள்

  • நீ நீயாக இரு உன் இலக்குகளை அடைய முயற்சி செய்து கொண்டே இரு 

  • தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம் 

  • உன் எண்ணங்கள் சிறந்தால் உலகம் உன் வசப்படும் 

  • குற்றம் குறை இல்லாத மனிதன் யாரும் இல்லை 

  • வெற்றி என்பது தானாக வருவது இல்லை உழைத்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் 

  • உயர்ந்த லட்சியமும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்

  • நல்ல எண்ணத்தோடு பேசுங்கள் நல்வாழ்க்கை கிடைக்கும் 

  • உண்மையே உயர்வுக்கு வழிகாட்டி!

  • வாழ்க்கையில் முன்னேறே அயராது உழையுங்கள் 

  • பன்பாளானாக நீ இருந்தால் படி அளப்பவனாக  நீ மாறிவிடுவாய்

  • பொய்யாக இருக்காதே உண்மையாக இரு

  • வாழ்வில் ஒரு நொடியை கூட வீணாக்காதீர்கள் 

  • உழைப்பே உயர்வு!! உழைப்பின் மூலமாக இந்த உலகையே உன் வசமாக்கலாம்

  • வெற்றியை இலக்காகக் கொள்ளுங்கள்,  உங்கள் உரிமையை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்

  • பயம் எப்போதும் உங்கள் வெற்றிக்கு தடைக்கல்லாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • புதிய விஷயங்களைக் கற்று உங்கள் வாழ்க்கையில் முன்னேறும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்

பொறுப்புத் துறப்பு: வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலான செய்தி இது. செய்தியிலுள்ள தகவல்கள் / விஷயங்களில் ‘தினமணி’க்கு எவ்விதப் பொறுப்புமில்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com