
புது தில்லி, அக். 15: தேசிய டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை யூகி பாம்ப்ரி வென்றுள்ளார். மகளிர் பிரிவில் இளம் வீராங்கனை ரூதுஜா போன்ஸ்லே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
÷தில்லியில் தேசிய டென்னிஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வந்தது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் யூகி பாம்ப்ரியும், விஷ்ணு வர்தனும் மோதினர். இதில் 6-4,7-6(6) என்ற செட் கணக்கில் யூகி வெற்றி பெற்று, தேசிய சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். அவருக்கு ரூ.1.51 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 19 வயதாகும் யூகி தில்லியைச் சேர்ந்தவர்.
÷மகளிர் பிரிவில் 15-வயது வீராங்கனை ரூதுஜா, முன்னாள் தேசிய சாம்பியன் இஷாவை எதிர்கொண்டார். இதில் 6-3,6-3 என்ற செட் கணக்கில் ரூதுஜா வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற இருவருக்கும் சானியா மிர்சா பரிசுகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.