இந்திய டூரிங் கார் பந்தயம்: கோவை விஜயகுமார் வெற்றி

கோவை, ஜூலை 8: கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய டூரிங் கார் பந்தயத்தில் கோவை வீரர் பி.விஜயகுமார் வெற்றி பெற்றார்.  15-வது ஜே.கே. டயர் தேசிய சாம்பியன் கோப்பைக்கான கார் பந்தயம், கோவை போத்தனூர் செ
Updated on
1 min read

கோவை, ஜூலை 8: கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய டூரிங் கார் பந்தயத்தில் கோவை வீரர் பி.விஜயகுமார் வெற்றி பெற்றார்.

 15-வது ஜே.கே. டயர் தேசிய சாம்பியன் கோப்பைக்கான கார் பந்தயம், கோவை போத்தனூர் செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீடு வேயில் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போட்டி நடந்தது. இந்திய ஜூனியர் டூரிங் கார் போட்டி முதலில் நடந்தது. மொத்தம் 15 சுற்றுகளில் 11 சுற்றில் முதலிடத்தில் இருந்த ஆர்சிட் மிலேண்டின் கார் பழுதானதால் மும்பை வீரர் ஷாத் குட்டி முதலிடம் பெற்றார். ஆனால் தவறிழைத்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

 சென்னை வீரர் எஸ். பெரோஸ் கான், 15 சுற்றுகளை 20 நிமிடம் 43.084 விநாடிகளில் கடந்து முதலிடம் பெற்றார். திருச்சூர் தில்ஜித் 2-வது இடத்தையும், கோவை எஸ். ஸ்ரீராம் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

 இந்திய டூரிங் கார்: போட்டியின் 8 சுற்றுகள் வரை முதலிடத்தில் இருந்த சென்னை வீரர் ராதா செல்வராஜன் காரில் கோளாறு ஏற்பட்டதால், இரண்டாவது இடத்தில் இருந்த கோவை வீரர் பி.விஜயகுமார் தொடர்ந்து முன்னிலை பெற்று 19 நிமிடம் 16.391 விநாடிகளில் முதலிடம் பெற்றார். சென்னை வீரர் வி.பாலவிஜய் 2-வது இடத்தையும், பெங்களூரு வீரர் என்.லீலாகிருஷ்ணன் 3-வது இடத்தையும் பெற்றனர்.÷

 போலோ ஆர்.கப் (முதல் போட்டி): இப்போட்டியில் நாட்டிலேயே முதன் முதலாக வோல்க்ஸ்வேகன் காரில் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு போட்டி நடந்தது. இதில் பந்தய தூரத்தை 14 நிமிடம் 30.038 விநாடிகளில் கடந்த கோவாவின் அதும்பர் ஹெடே முதலிடத்தையும், மும்பை வீரர் மிஹிர் தர்க்கார் இரண்டாமிடத்தையும், சென்னை வீரர் ஏ.சந்தீப்குமார் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

 டியூஸ் முதலிடம்: போலோ ஆர். கப் 2-வது போட்டியில் மெக்ஸிகோ வீரர் டீகோ டியூஸ் முதலிடத்தையும், சென்னையின் அப்துல்லா அலி ஷா இரண்டாமிடமும், சென்னையின் பிரசாந்த் தரணி சிங் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com