சர்வதேச டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னிலை வீரர்கள் வெற்றி

கோவை, ஜூலை, 17: கோவையில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு முன்னிலை வீரர்கள் முன்னேறியுள்ளனர்.  தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், கோவை டென்னிஸ் சங்கம், புரோ ச
சர்வதேச டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னிலை வீரர்கள் வெற்றி
Updated on
1 min read

கோவை, ஜூலை, 17: கோவையில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு முன்னிலை வீரர்கள் முன்னேறியுள்ளனர்.

 தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், கோவை டென்னிஸ் சங்கம், புரோ சர்வ் டென்னிஸ் அகாதெமி ஆகியவற்றின் சார்பில் கோவை, பெர்க்ஸ் பள்ளி டென்னிஸ் மையத்தில் இப் போட்டி நடைபெற்று வருகிறது.

 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ரஞ்சித் விரலி முருகேசன் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் சாந்தனு ராஜ்புத்தையும், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள என்.விஜய் சுந்தர் பிரசாந்த் 6-1, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் காஸô விநாயக் சர்மாவையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

 தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள கொரியாவின் ஹியூன் வூ நம் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் இந்தியாவின் லக்ஷித் சூடையும், தரவரிசையில் 6-வது இடத்திலுள்ள கருண்டே சிங், 7-6, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் சித்தார்த் ராவத்தையும் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

 தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் úஸக் இட்ஸ்டெயின் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் இந்தியாவின் ஆதித்யா திவாரியை வீழ்த்தினார்.

 அஜய் செல்வராஜ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரிஷப்தேவ் ராமனையும், தேஜாஸ் சாகுல்கர் 7-6, 7-6 என்ற நேர் செட்களில் ரஜத் மகேஸ்வரியையும், விக்னேஸ்வரன் ரமேஷ் 5-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் சப்ரவ் சிங்கையும், அபிஜித் திவாரி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் கார்வித் பத்ராவையும், விவேக் ஷோகீன் 7-6, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்டின் கரோசியையும் வீழ்த்தி அடுத்த சுற்றை உறுதி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com