மாநில ஜூனியர் செஸ்: மூவர் முன்னிலை

கோவை, ஜூன் 12: கோவையில் நடந்து வரும் மாநில ஜூனியர் செஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் 8-வது சுற்றின் முடிவில் காஞ்சிபுரத்தின் எஸ்.பிரசன்னா, கோவை ஜா. கிரிமேன், கன்னியாகுமாரி ஜே.நிஷ்வின் ஆகிய 3 பேரும் தலா 6
Updated on
1 min read

கோவை, ஜூன் 12: கோவையில் நடந்து வரும் மாநில ஜூனியர் செஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் 8-வது சுற்றின் முடிவில் காஞ்சிபுரத்தின் எஸ்.பிரசன்னா, கோவை ஜா. கிரிமேன், கன்னியாகுமாரி ஜே.நிஷ்வின் ஆகிய 3 பேரும் தலா 6.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

 கோவை மாவட்ட செஸ் சங்கம் சார்பில் நடந்து வரும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை 7 மற்றும் 8-வது சுற்றுப் போட்டிகள் நடந்தன. அதன் முடிவுகள்: காஞ்சிபுரத்தின் எஸ்.பிரசன்னா, கோவை கிரிமேனுடன் டிரா செய்தார்.

 மதுரை மணிகண்டன்-சென்னை ஒசாமா சலீம் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. கன்னியாகுமரியின் ஜே.நிஷ்வின் கோவை ஆர்.கணேஷைத் தோற்கடித்தார்.

 புளூம் செஸ் அகாதெமியின் எஸ்.ஆனந்த்ராஜ், ஈரோட்டின் என்.டி. ராகேஷ்குமாரைத் தோற்கடித்தார். ஆடவர் பிரிவில் 3 பேர் 6.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 5 பேர் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

 பாலகண்ணம்மா முன்னிலை: மகளிர் பிரிவில் சென்னையை சேர்ந்த பி. பாலகண்ணம்மா 8-வது சுற்றின் முடிவில் 6 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றுள்ளார்.

 8-வது சுற்றின் முக்கிய முடிவுகள்: சென்னை ஏ.அக்ஷயா, சென்னை சுஷ்மிதாவுடன் டிரா செய்தார். சென்னை பாலகண்ணம்மா, கோவை அக்ஷயா நந்தகுமாரைத் தோற்கடித்தார். சென்னை என்.ஹேமா பிரியா, சக ஊரைச் சேர்ந்தவரான எம்.சந்தியாவைத் தோற்கடித்தார். மகளிர் பிரிவில் 3 பேர் தலா 6 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com