ஜூனியர் தடகளம்: தொடரும் சாதனைகள்

கோவையில் நடைபெற்று வரும் மாநில ஜூனியர் தட களப் போட்டியின் 2ஆவது நாளான சனிக்கிழமை 3 புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. முதல் நாளிலும் 3 சாதனைகள் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Updated on
2 min read

கோவையில் நடைபெற்று வரும் மாநில ஜூனியர் தட களப் போட்டியின் 2ஆவது நாளான சனிக்கிழமை 3 புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. முதல் நாளிலும் 3 சாதனைகள் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

÷ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள், கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில் கோவை நேரு விளையாட்டு அரங்கில் இப் போட்டிகள் வெள்ளிக்கிழமை துவங்கின. ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகின்றன.

2-வது நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்:

மகளிர் பிரிவு 14 வயதுக்கு உள்பட்டோர்:

நீளம் தாண்டுதல்: 1. எஸ்.நந்தினி (செயின்ட் ஜோசப் அகாதெமி), 2. எஸ்.பிரியதர்ஷினி (யு.எஸ்.எப்.), 3. வி.தினதுர்கா (ஏ.ஏ.ஏ.).

16 வயதுக்கு உள்பட்டோர்:

ஈட்டி எறிதல்: 1. எம். பிரியா (சேலம்), 2.ஆர்.ரஞ்சிதா (எஸ்.டி.ஏ.டி.), 3. ஜே.சண்முகப் பிரியா (செயின்ட் ஜோசப் அகாதெமி).

18 வயதுக்கு உள்பட்டோர்:

100 மீ. தடை தாண்டும் ஓட்டம்: 1. எம்.செüம்யா (என்.எல்.சி.), 2. பி.தனலட்சுமி (கே.ஏ.ஏ.), 3. ஜி.மதுமதி (எஸ்.டி.ஏ.டி.)

வட்டு எறிதல்: 1. எம்.மகாலட்சுமி (செயின்ட் ஜோசப் அகாதெமி), 2. ரேகா (எஸ்.ஏ.ஐ.),

3. ஜி.திவ்யா (செயின்ட் ஜோசப் அகாதெமி).

நீளம் தாண்டுதல்: 1. ஜி.கார்த்திகா (எஸ்.ஏ.ஐ), 2. ஜே.ஷைனி (செயின்ட் ஜோசப் அகாதெமி), 3. எம்.ஜனனி (எஸ்.டி.ஏ.டி.).

குண்டெறிதல்: 1. கே.சுபாஷினி (செயின்ட் ஜோசப் அகாதெமி), 2. பி.மஞ்சுளா (எஸ்.டி.ஏ.டி.), 3. ஜி.திவ்யா (செயின்ட் ஜோசப் அகாதெமி) இப்போட்டியில் கே.சுபாஷினி 12.95 மீட்டர் தூரம் குண்டெறிந்து புதிய சாதனை படைத்தார்.

கம்பு ஊன்றித் தாண்டுதல்:

1. பிரியதர்ஷினி 2. எம்.கயல்விழி, 3. எஸ்.ஜீவராணி (மூவரும் எஸ்.டி.ஏ.டி.).

3000 மீட்டர் ஓட்டம்: 1.எஸ்.விஜயலட்சுமி (செயின்ட் ஜோசப் அகாதெமி), 2. சி.சுசிலா (கவிநாடு), 3.ஆர்.கற்பகலட்சுமி (எஸ்.டி.ஏ.டி.).

20 வயதுக்கு உள்பட்டோர்:

100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்: 1. பி.தீபிகா 2. பி.சுகன்யா (இருவரும் செயின்ட் ஜோசப் அகாதெமி), 3. கே.கீர்த்தனா (இ.ஏ.டி.சி.).

800 மீட்டர் ஓட்டம்: 1.ஐ.கிருஷ்ணவேணி (எஸ்.டி.ஏ.டி.), 2. கே.மீனாட்சி (செயின்ட் ஜோசப் அகாதெமி), 3. ஆர்.அஞ்சுகம் (எஸ்.டி.ஏ.டி.)

கம்பு ஊன்றித் தாண்டுதல்: 1. இ.பவித்ரா, 2.என்.கலைமதி, 3.என்.நீலோபர் (மூவரும் எஸ்.டி.ஏ.டி.).

5 ஆயிரம் மீட்டர் நடை: 1. எம்.ராஜேஸ்வரி (எஸ்.டி.ஏ.டி.), 2. எம்.ஐஸ்வர்யா (கே.ஒய்.எஸ்.), 3. ஜே.சூர்யா (செயின்ட் ஜோசப்).

10 ஆயிரம் மீட்டர் நடைப் போட்டி: 1.எம். திவ்யபாரதி, 2. எம்.செüம்யஸ்ரீ (இருவரும் செயின்ட் ஜோசப் அகாதெமி), 3.எஸ்.வினிதா (எஸ்.டி.ஏ.டி.).

ஆடவர் பிரிவு 14 வயதுக்கு உள்பட்டோர் நீளம் தாண்டுதல்: 1.எம்.ஜீவா (செயின்ட் ஜோசப் அகாதெமி), 2.எம்.தனுஷ் (கே.ஏ.சி.), 3. எம்.மகேஷ் (எஸ்.டி.ஏ.டி.).

16 வயதுக்கு உள்பட்டோர்:

சங்கிலி குண்டெறிதல்: 1.என்.பார்த்திபன், 2. பி.கார்த்திக் (இருவரும் எஸ்.டி.ஏ.டி.), 3. பி.டேவிட் (பி.ஜே.ஏ.சி.).

18 வயதுக்கு உள்பட்டோர்:

10 கி.மீ. நடைப் போட்டி: 1. ஏ.ஹனிபா (யு.எஸ்.எப்.), 2. எம்.ஜெயசூர்யா (எஸ்.டி.ஏ.டி.), 3.வி.மணிகண்டன் (செயின்ட் ஜோசப் அகாதெமி). இவர்களில் ஏ.ஹனிபா பந்தய தூரத்தை 51:53.8 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்தார்.

சங்கிலி குண்டெறிதல்: 1.ஆர்.முரளி (ஜி.கியூ.டி.ஏ.), 2.ஆர்.தானியராஜ் (செயின்ட் ஜோசப் அகாதெமி), 2. பி.சந்தோஷ்குமார் (எஸ்.டி.ஏ.டி.), 3. பி.மணிகண்டன் (செயின்ட் ஜோசப் அகாதெமி).

உயரம் தாண்டுதல்:

1. ஏ.கஷன் கான் (செயின்ட் ஜோசப் அகாதெமி), 2.கே.வினித் (யு.எப்.ஏ.),

3. டி.மரடோனா (கே.ஏ.சி.).

20 வயதுக்கு உள்பட்டோர்:

10 கி.மீ. நடைப் போட்டி:

1.எஸ்.சரவணகுமார் (செயின்ட் ஜோசப் அகாதெமி), 2. எஸ்.உதயபிரகாஷ், 3. ஆர்.பிரபாகரன் (இருவரும் எஸ்.டி.ஏ.டி.). இவர்களில் எஸ்.சரவணகுமார், 48.44.3 நிமிடங்களில் இலக்கை எட்டி புதிய சாதனை படைத்தார்.

5000 மீட்டர் ஓட்டம்:

1. ஏ.மனோ (எஸ்.டி.ஏ.டி.), 2. எஸ்.முருகானந்தம் (கே.ஒய்.எஸ்.சி.), 3. பரமேஸ்வரன் (செயின்ட் ஜோசப் அகாதெமி).

சங்கிலி குண்டெறிதல்:

1. சி.கிஷோர் குமார், எஸ்.விக்னேஷ், 3. ஹரிஹரன் (மூவரும் செயின்ட் ஜோசப் அகாதெமி).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com