மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பெல்பின்ஸ் கோப்பைக்கான மாநில ஹாக்கி: முதல் போட்டியில் மதுரை அணி வெற்றி

பெல்பின்ஸ் கோப்பைக்கான 17 ஆவது மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி பாளையங்கோட்டையில் புதன்கிழமை தொடங்கியது. முதல்

News image
Updated On :20 ஆகஸ்ட் 2014, 2:35 pm

பெல்பின்ஸ் கோப்பைக்கான 17 ஆவது மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி பாளையங்கோட்டையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளி அணி வென்றது.

பாளையங்கோட்டை ஹாக்கி நலச்சங்கம் சார்பில், அண்ணா விளையாட்டு மைதானத்தின் செயற்கைதளத்தில் நடைபெறும் இப் போட்டியின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. ஹாக்கி நலச்சங்கத் தலைவர் மேஜர் எஸ். பெனடிக்ட் தலைமை வகித்தார்.  பெல்பின்ஸ் நிறுவன இயக்குநர்கள் குணசிங் செல்லத்துரை, சஞ்சய்குணசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய சவேரியார் கல்லூரி முதல்வர் கில்பர்ட் கமிலஸ் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
முதலாவது போட்டியில் வள்ளியூர் கிங்க்ஸ் பள்ளி அணியை, மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளி அணி 0-3 என்ற கோல்கணக்கில் வென்றது.

தொடர்ந்து இம் மாதம் 23 ஆம் தேதி வரை 4 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. வெற்றி பெறும் அணிக்கு பெல்பின்ஸ் கோப்பை, சான்றிதழ், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. 2 ஆவது நாளான வியாழக்கிழமை (ஆக.21) காலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மேட்டுப்பாளையம் எஸ்.ஜெ.என். பள்ளி அணியும், மணப்பாறை பள்ளி அணியும் மோதுகின்றன. மாலை 4.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளி அணியும், பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி அணியும் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.