கடந்த ஒரு வருடமாக இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக விளங்கும் தொடக்க வீரர் முரளி விஜய், காயம் காரணமாக, கேலேவில் நடக்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் முரளி விஜய்க்கு தசைநார் முறிவு காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் வேறு எந்த முக்கியப் போட்டிகளிலும் கலந்துகொள்ளவில்லை. முதல் டெஸ்ட் போட்டிக்குள் காயம் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதுபற்றி கூறிய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி: முரளி விஜய் காயத்தில் இருந்து இன்னும் மீண்டுவரவில்லை. கேலேவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாங்கள் எந்தவித ரிஸ்க்கும் எடுக்கவிரும்பவில்லை. விஜய், தொடர்ந்து நன்றாக விளையாடி வருபவர். அவருடைய விலகல் எங்களுக்கு இழப்புதான் என்றார்.
இதனால், 12-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ராகுலும் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - விருச்சிகம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - துலாம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - கன்னி

வார பலன்கள் (ஏப். 24 - 30) - சிம்மம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


