ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெறுகிறார் கிரிஸ் ரோஜர்ஸ்!

2015-ம் ஆண்டு அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களில் ரோஜர்ஸுக்கு இரண்டாம் இடம்.
ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெறுகிறார் கிரிஸ் ரோஜர்ஸ்!
Updated on
1 min read

ஆஷஸ் தொடரின் இறுதி டெஸ்டுடன் ஓய்வு பெற உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ரோஜர்ஸ் கூறியுள்ளார்.

இவருக்கு 31-வது வயதில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. ஒரு டெஸ்ட் தான். அடுத்த வாய்ப்பு 2013-ல் தான் கிடைத்தது. (இதுவரை ஆடிய 24 டெஸ்டுகளில் 23 டெஸ்டுகள் 35 வயதுக்குப் பிறகு ஆடியவை.)

2015-ம் ஆண்டு அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களில் ரோஜர்ஸுக்கு இரண்டாம் இடம். இந்த ஆஷஸ் தொடரிலும் அதிக ரன்கள் எடுத்த ஆஸி. வீரராக உள்ளார். ஆனாலும் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com