2-வது டெஸ்ட்: இந்தியா 97/2

இந்த ஜோடி 21.3 ஓவர்களில் 85 ரன்களை எடுத்தது. உணவு இடைவேளையின்போது இந்திய அணி
2-வது டெஸ்ட்: இந்தியா 97/2
Updated on
1 min read

இந்தியா - இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும், துரதிர்ஷ்டவசமாக 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில், ஷிகர் தவன், ஹர்பஜன் சிங், வருண் ஆரோனுக்குப் பதிலாக முரளி விஜய், பின்னி, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முரளி விஜய் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். 3-வதாக களமிறங்கிய ரஹானே 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.

அதன்பிறகு ஆடிய ராகுலும் கோலியும் பொறுப்புடன் ஆடினார்கள். கோலி சற்று அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். இதனால் இந்த ஜோடி 21.3 ஓவர்களில் 85 ரன்களை எடுத்தது. உணவு இடைவேளையின்போது இந்திய அணி 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்களை எடுத்துள்ளது. கோலி 48, ராகுல் 39 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

இலங்கை அணியின் மூத்த வீரர் குமார் சங்ககாராவுக்கு இது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி. தனது 134-ஆவது டெஸ்ட் போட்டியுடன் அவர் விடைபெறுகிறார். அவருக்கு இன்று பிசிசிஐ சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com