2-வது டெஸ்ட்: இந்தியா 386/8; சஹா அரை சதம்!

இந்திய அணி மதிய உணவு இடைவேளையின்போது 8 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்துள்ளது.
Updated on
1 min read

இந்தியா - இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2-வதுநாளான இன்று இந்திய அணி மதிய உணவு இடைவேளையின்போது 8 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும், துரதிர்ஷ்டவசமாக 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 2-வது டெஸ்டில், முதல்நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 87.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 319 ரன்களைக் குவித்தத. சஹா 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இன்று சஹாவுடன் இணைந்து நன்றாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மிஸ்ரா 50 பந்துகள் வரை தாக்குப்பிடித்தார். அவர் 24 ரன்களில் அவுட் ஆனார். இந்திய அணி மதிய உணவு இடைவேளையின்போது 8 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்துள்ளது. அரை சதம் அடித்த சஹா 56 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று இந்திய அணி 23.4 ஓவர்களில் 67 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com