

அமெரிக்காவில் நடைபெறும் சின்கியூஃபீல்ட் செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்துள்ளார்.
9 சுற்றுகள் உள்ள இந்தப் போட்டியில் 10 முன்னணி வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். முக்கியமாக உலகின் டாப் 7 வீரர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இந்த வருடத்தின் மிகவும் பலமான போட்டி என வர்ணிக்கப்படும் இந்த சின்கியூஃபீல்ட் செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் அமெரிக்காவின் நாகமுராவைச் சந்தித்தார்.
இதில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடிய நாகமுரா 43-வது நகர்த்தலில் ஆனந்தைத் தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில், டொபலோவ் உலக சாம்பியன் கார்ல்சனைத் தோற்கடித்தார். அரோனியன், அனிஷ் கிரி, மேக்ஸிம் வாச்சியர் லாக்ரே ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.