அஸ்வின் பந்துவீச்சை நொறுக்கவேண்டும்: தவிடுபொடியான மேத்யூஸின் திட்டம்

கடைசி டெஸ்டிலிருந்து நாங்கள் அஸ்வினைப் பற்றி பேசி வருகிறோம்.
அஸ்வின் பந்துவீச்சை நொறுக்கவேண்டும்: தவிடுபொடியான மேத்யூஸின் திட்டம்
Updated on
1 min read

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 17 விக்கெட்டுகள் எடுத்து இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களில் முதலிடத்தில் உள்ளார் அஸ்வின்.

இலங்கை அணிக்குப் பெரிய தலைவலியாக இருப்பது அஸ்வினின் பந்துவீச்சுதான். இதைப் பற்றி அணியின் கேப்டன் மேத்யூஸ் என்ன சொல்கிறார்?

கடைசி டெஸ்டிலிருந்து நாங்கள் அஸ்வினைப் பற்றி பேசி வருகிறோம். அவர் மிகவும் துல்லியமாகப் பந்துவீசுகிறார். பாகிஸ்தான் யாசிர் ஷாவும் அப்படித்தான். அவர்களுக்கு எதிராக ஆடும்போது நம்பிக்கையுடன் ஆடவேண்டும். ஆறு பந்துகளிலும் தடுப்பாட்டம் ஆடுவதற்குப் பதிலாக வாய்ப்பு கிடைக்கும்போது அதிரடியாக ஆடப் பார்க்கவேண்டும். இந்த டெஸ்டில் அப்படித்தான் ஆட நினைத்தோம். ஆனால் அதைச் செய்யமுடியவில்லை. மீண்டும் நாங்கள் தடுமாறினோம்.

எங்கள் அணியில் நிறைய இடக்கை பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். அதனால் ஆக்ரோஷமான மனநிலையுடன் பந்துவீச அஸ்வினால் முடிகிறது. அவர் பந்துவீச்சில் ரன் அடிக்க முயற்சி செய்யவேண்டும். அவர் பந்துவீச்சை தாக்குதல் முனைப்புடன் எதிர்கொள்ளவேண்டும். அடுத்தப் போட்டியில் முயற்சி செய்வோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com