

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சிங்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்திலும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சிங்க்ஃபீல்ட் கோப்பை கிராண்ட் செஸ் போட்டி திங்கள்கிழமை தொடங்கியது. மொத்தம் 9 சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியில், நடப்பு உலகச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸன், அர்மீனியாவின் லெவோன் அரோனியன், ஹாலந்து நாட்டின் அனீஷ் கிரி, இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட முன்னணி செஸ் வீரர்கள் 10 பேர் பங்கேற்று வருகின்றனர்.
முதல் சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். இதனால் இரண்டாவது சுற்றில் அவர் முதல் புள்ளியைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அலெக்ஸாண்டர் க்ரிஷுக்குடன் நடந்த ஆட்டத்திலும் அவர் தோல்வியடைய நேர்ந்தது. 35-வது நகர்த்தலின்போது தனது தோல்வியை ஒப்புக்கொண்டார் ஆனந்த்.
முதல் சுற்றில் கார்ல்சனைத் தோற்கடித்த டொபலோவ், நேற்றைய இரண்டாவது சுற்றிலும் வெற்றி பெற்றார். கருணாவுடன் மோதிய ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்றார். 2-வது சுற்றின் முடிவில் டொபலோவ் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.