3-வது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா!

தேநீர் இடைவேளை நெருங்கும் சமயத்தில் 39 ரன்களில் ரன் அவுட் ஆனார் மிஸ்ரா.
Updated on
1 min read

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டில் இந்திய அணி 345 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலைமையில் உள்ளது.

இந்தியா-இலங்கை இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 111 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 312 ரன்களும் இலங்கை அணி 201 ரன்களும் பெற்றன. 3-ம் நாளின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்தது. கோலி 1 ரன்னுடனும், ரோஹித் சர்மா 14 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டம் தொடங்கியபோது சிறிது நேரம் தாக்குப் பிடித்த கோலி, பிறகு 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா மிகவும் கவனமாக ஆடி அரை சதம் அடித்து அவுட் ஆனார். பிறகு ஜோடி சேர்ந்த புதிய முகங்கள் பின்னி - ஓஜா உணவு இடைவேளை வரை அவுட் ஆகாமல் இருந்தார்கள். உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. பின்னி 38, ஓஜா 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

பிறகு 45-வது ஓவரில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார் பின்னி. அடுத்ததாக நன்றாக ஆடி வந்த ஓஜாவும் 35 ரன்களில் ஹெராத் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். பிறகு ஜோடி சேர்ந்த மிஸ்ராவும்  அஸ்வினும் பொறுப்பாக ஆடி இந்திய அணியின் ரன்களை அதிகரித்தார்கள். தேநீர் இடைவேளை நெருங்கும் சமயத்தில் 39 ரன்களில் ரன் அவுட் ஆனார் மிஸ்ரா. இதனால் தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டது. அப்போது அஸ்வின் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார். 2 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com