3-வது டெஸ்ட்: ரோஹித் சர்மா அரை சதம்!

ரோஹித் சர்மா மிகவும் கவனமாக ஆடி அரை சதம் அடித்து அவுட் ஆனார்.
Updated on
1 min read

இந்தியா-இலங்கை இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 111 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 312 ரன்களும் இலங்கை அணி 201 ரன்களும் பெற்றன. 3-ம் நாளின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்தது. கோலி 1 ரன்னுடனும், ரோஹித் சர்மா 14 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டம் தொடங்கியபோது சிறிது நேரம் தாக்குப் பிடித்த கோலி, பிறகு 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா மிகவும் கவனமாக ஆடி அரை சதம் அடித்து அவுட் ஆனார். பிறகு ஜோடி சேர்ந்த புதிய முகங்கள் பின்னி - ஓஜா உணவு இடைவேளை வரை அவுட் ஆகாமல் இருந்தார்கள். உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. பின்னி 38, ஓஜா 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

பிறகு 45-வது ஓவரில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார் பின்னி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com