வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஒவ்வொரு போட்டியிலும் செஞ்சுரி அடிப்பேன் என நினைத்தேன்: புஜாரா

அணியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு என்னை நிரூபிக்க முயல்வேன்.

News image
Updated On :1 ஜூலை 2015, 12:06 pm

இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் புஜாரா.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் சரியாக ஆடாததால் இந்தியா ஏ அணியில் அவர் இடம்பெற்றிருப்பது அடுத்து வருகிற சர்வதேசப் போட்டிகளுக்கான பயிற்சியாக அமையும்.

இந்தியா ஏ அணி, ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இரு முதல்தரப் போட்டிகளில் (4 நாள்) விளையாடவுள்ளது. இந்தத் தொடர் பற்றி புஜாரா கூறும்போது:

எனது தோல்விகளை ஒப்புக்கொள்கிறேன். இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு முன்பு நான் அதிக ரன்கள் அடித்ததால் அதற்குப் பிறகு ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடிப்பேன் என நினைத்தேன். ஆனால் நினைத்த ரன்களை அடிக்கமுடியாதது விரக்தியை ஏற்படுத்தியது. காலம் செல்லச் செல்ல என் தோல்வியை  ஏற்றுக்கொண்டேன்.

இந்தியா ஏ அணியில் விளையாடுவது நல்ல அனுபவமாக இருக்கும். டிராவிட் பயிற்சியாளராக இருப்பது அணிக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும்.

இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து ஆடிவருகிறேன். அவ்வப்போது சில மேட்சுகளில் ஆடவில்லை. அணியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு என்னை நிரூபிக்க முயல்வேன். முன்னாள் வீரர்கள் பலரும் இதைத்தான் எனக்கு அறிவுரையாகச் சொன்னார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.