விம்பிள்டன்: நடால் அதிர்ச்சித் தோல்வி!

இரண்டுமுறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற நடால் இந்தச் சுற்றில் எளிதாக வென்றுவிடுவார் என்று...
விம்பிள்டன்: நடால் அதிர்ச்சித் தோல்வி!
Updated on
1 min read

பிரிட்டனில் நடைபெற்று வரும் புகழ் பெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வியாழக்கிழமை இரண்டாவது சுற்றுக்கான ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று ரஃபெல் நடாலும் ஜெர்மனியைச் சேர்ந்த  டஸ்டின் பிரவுனும் மோதினார்கள். இரண்டுமுறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற நடால் இந்தச் சுற்றில் எளிதாக வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தரவரிசையில் 102-வது இடத்தில் உள்ள டஸ்டின் பிரவுன் அமர்க்களமாக ஆடி 7-5 3-6 6-4 6-4 என நடாலைத் தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து மூன்று வருடங்களாக கால் இறுதிக்கு முந்தைய சுற்றுகளில் தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறிய நடாலுக்கு இந்த வருடமும் அதேபோலொரு நிலைமையே ஏற்பட்டுள்ளது.

டஸ்டின் பிரவுன் இதற்கு முன்பு 2014ல் நடாலுடன் மோதியபோதும் வெற்றி கண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com