சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்: காயம் காரணமாக கர்ண் சர்மா விலகல்!

சர்மாவுக்குப் பதிலாக புதிய வீரர் யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை...

News image
Updated On :6 ஜூலை 2015, 9:47 am

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திலிருந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் கர்ண் சர்மா விலகியுள்ளார். இடது கையின் நடு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய பிசிசிஐயின் செய்திக் குறிப்பில், கர்ண் சர்மாவுக்கு இடது கையின் நடுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழுவின் அறிக்கையில், கர்ண் சர்மாவால் இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் பங்கேற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

சர்மாவுக்குப் பதிலாக புதிய வீரர் யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை. 14 பேர் கொண்ட இந்திய அணியில் ஹர்பஜன் சிங்கும் அக்‌ஷர் படேலும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளார்கள்.  

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் ஆடவுள்ள 3 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டி, ஜூலை 10-ம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.