இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் 382 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது பாகிஸ்தான் அணி.
பல்லேகெலேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், நான்காவது இன்னிங்ஸில் 377 ரன்கள் என்கிற இலக்குடன் ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத், யூனிஸ் கான் ஆகியோர் அபாரமாக ஆடி சதம் அடித்தார்கள். 125 ரன்களில் மசூத் அவுட் ஆனாலும் 171 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் யூனிஸ் கான்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச 6-வது சேஸ் இதுவாகும். பாகிஸ்தானின் அதிகபட்ச சேஸும் இதுதான். ஆசிய அளவில் இது இரண்டாவது அதிகபட்ச சேஸ்.
இதன்மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி. 2006-க்குப் பிறகு அந்த அணி இப்போதுதான் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இதன்மூலம் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை யூனிஸ் கான் பெற்றார்.
3-வது டெஸ்ட் போட்டி:
இலங்கை 278 (கருணாரத்னே 130, யாசிர் 5-78) மற்றும் 313 (மேத்யூஸ் 122, சண்டிமல் 67, இம்ரான் 5-58)
பாகிஸ்தான் 215 (சர்ஃப்ராஸ் 78*, அசார் 52) மற்றும் 382/3 (யூனிஸ் 171*, மசூத் 125, மிஸ்பா 59*)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

