வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு! ராயுடு சதம்!

ஆரம்பம் முதல் இந்திய அணி, ஜிம்பாப்வேயின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்கமுடியாமல் தடுமாறியது.

Updated On :10 ஜூலை 2015, 10:19 am

ஹராரேவில் நடைபெறும் இந்தியா - ஜிம்பாப்வே ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் ஹாமில்டன் மசகட்ஸா, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணியில் ரஹானே, விஜய், ராயுடு, திவாரி, உத்தப்பா, ஜாதவ், பின்னி, அக்‌ஷர், ஹர்பஜன், புவனேஷ்வர், குல்கர்ணி ஆகியோர் உள்ளார்கள். உத்தப்பா இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

ஆரம்பம் முதல் இந்திய அணி, ஜிம்பாப்வேயின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்கமுடியாமல் தடுமாறியது.

தொடக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ரஹானே ஓரளவு நன்றாக ஆடினாலும் அவரும் 34 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால், அதன்பிறகுதான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்க ஆரம்பித்தது.

நான்காவதாக களமிறங்கிய திவாரி, 2 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் முறையில் அவுட் ஆனார். பிறகு ஜாதவ்வும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களில் என்கிற பரிதாபமான நிலைக்கு வந்தது.

ராயுடு - பின்னி ஜோடி பொறுப்பாக ஆடி, இந்தியாவை சரிவிலிருந்து ஓரளவு மீட்டியது. ராயுடு அபாரமாக ஆடி சதம் அடித்தார். பின்னி அரை சதம் அடித்தார். இந்திய அணி 45 ஓவரின்போது 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. ராயுடு 104, பின்னி 50 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.