முதல்நாளில் இந்தியா ஏ அணி 221/6

78-வது ஓவரின்போது மழை பெய்ய ஆரம்பித்ததால் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. முதல்நாள் முடிவில் இந்தியா ஏ அணி 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.
Updated on
1 min read

இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 4 நாள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்தியா ஏ அணி 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் கேஎல் ராகுல், முகுந்த், புஜாரா, கருண் நாயர், நமன் ஓஜா, ஸ்ரேயாஸ் ஐயர், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, உமேஷ் யாதவ், விஜய் சங்கர், மிதுன் ஆகியோர் இடம்பெற்றார்கள்.

தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும் முகுந்தும் களமிறங்கினார்கள். முகுந்த் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஆடிய ராகுல் - புஜாரா ஜோடி மிக அருமையாக ஆடியது. 40-வது ஓவரில் 55 ரன்களில் ஆட்டமிழந்தார் புஜாரா. அடுத்ததாக களமிறங்கிய கருண் நாயர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். மிகவும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களில் அவுட் ஆனார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல், 96 ரன்களில் சீன் அபாட் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

78-வது ஓவரின்போது மழை பெய்ய ஆரம்பித்ததால் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. முதல்நாள் முடிவில் இந்தியா ஏ அணி 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com