

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, மூன்று டி20, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்டுகளில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இரு அணிகளும் ஒன்றாக 4 டெஸ்டுகள் கொண்ட தொடரில் பங்கேற்பது இதுவே முதல்முறை. அதேபோல தென் ஆப்பிரிக்கா அணி முதல்முதலாக இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் டி20 போட்டியில் ஆடவுள்ளது. பெங்களூரில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஏபி டிவில்லியர்ஸின் 100-வது டெஸ்ட் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்-லில் பெங்களூர் அணி சார்பாக அவர் விளையாடுகிறார்.
டி 20 போட்டிகள்
செப்டம்பர் 29 பயிற்சி ஆட்டம் |
டெல்லி | |
| 1. | அக்டோபர் 2 | தர்மசாலா |
| 2. | அக்டோபர் 5 | கட்டாக் |
| 3. | அக்டோபர் 8 | கொல்கத்தா |
ஒருநாள் போட்டிகள்
| 1. | அக்டோபர் 11 | கான்பூர் |
| 2. | அக்டோபர் 14 | இந்தூர் |
| 3. | அக்டோபர் 18 | ராஜ்கோட் |
| 4. | அக்டோபர் 22 | சென்னை |
| 5. | அக்டோபர் 25 | மும்பை |
டெஸ்ட் போட்டிகள்
அக்டோபர் 30-31 பயிற்சி ஆட்டம் | மும்பை | |
| 1. | நவம்பர் 5-9 | மொஹலி |
| 2. | நவம்பர் 14-18 | பெங்களூர் |
| 3 | நவம்பர் 25-29 | நாக்பூர் |
| 4. | நவம்பர் 3-7 | டெல்லி |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.