ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் மரடோனா!

நான் மிகவும் வலுவானவன். எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. நான் திரும்பி வரும்போது...
ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் மரடோனா!
Updated on
1 min read

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைவர் பொறுப்பில் இருந்து செப் பிளேட்டர் ஒதுங்கியதை அடுத்து, அந்த பதவிக்கு பொருத்தமானவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பிஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் வீரர் மரடோனா அறிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்ற ஃபிஃபா தலைவருக்கான தேர்தலில், பிளேட்டர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஊழல், முறைகேடு காரணமாக ஃபிஃபா முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதால், பிளேட்டர் பதவி விலக வேண்டும் என்று உலகெங்கும் எதிர்ப்பு நிலவியது. இதையடுத்து பிளேட்டர், தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அத்துடன் விரைவில் ஃபிஃபா மாநாட்டைக் கூட்டி, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

விதிமுறைப்படி, டிசம்பர் மாத இறுதியில் இருந்து அடுத்த மார்ச் மாதத்துக்குள் ஃபிஃபா மாநாட்டை நடத்த வேண்டும். அதுவரை பிளேட்டரே தலைவராக நீடிப்பார். இருப்பினும், இப்போதிருந்தே அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லூயிஸ் ஃபிகோ (போர்ச்சுகல்), ஜெரோம் சாம்பென் (பிரான்ஸ்), பிளாட்டினி (பிரான்ஸ்), சுனில் குலாட்டி (அமெரிக்கா), ஜிகோ (பிரேசில்), இளவரசர் அலி பின் அல் ஹுசைன் (ஜோர்டன்), மைக்கேல் வேன் பிராக் (நெதர்லாந்து), ஷேக் அகமது அல்-ஃபஹத் அல் - சபா (குவைத்) ஆகியோரும் இவர்கள் தவிர்த்து ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான ஐசே ஹயாடு, பிரான்சின் டேவிட் கினோலா, உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற லிபேரியாவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜார்ஜ் வீ, வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பின் தலைவரான ஹோண்டுரஸ் நாட்டின் அல்ஃபிரடோ ஹவிட் ஆகியோரும் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

இப்போது பிரபல கால்பந்து வீரர் மரடோனாவும் இந்தப் போட்டியில் இணைந்துள்ளார். சமீபத்தில் அவருடைய தந்தை காலமானார். அதை முன்னிட்டு அவர் தன் ரசிகர்களுக்கு வீடியோ மூலமாக வெளியிட்டுள்ள செய்தியில், என் அர்ஜெண்டினா மக்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். நான் மிகவும் வலுவானவன். எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. நான் திரும்பி வரும்போது மீண்டும் என் பணியைத் தொடர்வேன். ஃபிஃபாவுக்காக மீண்டும் வருவேன். என் குடும்பத்துக்காகவும். அவர்களும் என்னைப் போலவே துயரத்தில் உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் மரடோனாவும் போட்டியிட உள்ளார் எனத் தெரியவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com