சென்னை போட்டி: ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி!

கோலி 16 ரன்களை எடுத்து அகர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்...
Updated on
1 min read

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக புஜாராவும் முகுந்தும் களம் இறங்கினார்கள். புஜாரா 11 ரன்களில் அவுட் ஆனார். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தார்கள். காரணம், அடுத்ததாக விராட் கோலி ஆட வருவதால்.

ஆஸ்திரேலிய ஏ அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் இந்திய ஏ அணியினரால் வேகமாக ரன்கள் குவிக்கமுடியவில்லை. 42 பந்துகளைச் சந்தித்த கோலி 16 ரன்களை எடுத்து அகர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அவர் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்தார். கோலி வந்தவேகத்தில் அவுட் ஆனதால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள்.

உணவு இடைவேளையின்போது, இந்தியா ஏ அணி 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் (9), ஓஜா (0) ஆகியோர் களத்தில் உள்ளார்கள்.

இந்தப் போட்டியில் விளையாடும் இந்திய அணி:

புஜாரா (கேப்டன்), முகுந்த், கோலி, கருண் நாயர், அபரஜித், ஸ்ரேயாஸ் ஐயர், நமன் ஓஜா, ஷர்துல், ஸ்ரேயாஸ் கோபால், பிரக்யான் ஓஜா, வருண் ஆரோன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com