

ஐசிசி சிறப்பு நடுவர் குழுவில் நீண்டகாலமாக ஓர் இந்தியர் இல்லாத குறை இப்போது நீங்கியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த எஸ். ரவி சிறப்பு நடுவர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எஸ். வெங்கட்ராகவனுக்குப் பிறகு (2002) இந்தக் குழுவில் இணையும் இந்தியர் என்கிற பெருமையை அடைகிறார் எஸ். ரவி. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 6 டெஸ்ட், 24 ஒருநாள் மற்றும் 12 டி20 போட்டிகளில நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
இந்தச் செய்தி குறித்து பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் கூறும்போது, எஸ். ரவிக்கு வாழ்த்துகள். இவரைத் தொடர்ந்து மேலும் பல இந்திய நடுவர்கள் இதேபோன்ற பெருமையை அடைவார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு குறித்து எஸ். ரவி கூறும்போது, எனக்கு முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்றார்.
2015-16க்கான ஐசிசி சிறப்பு நடுவர் குழுவில் 12 நடுவர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.