டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் நானே ராஜா: கிறிஸ் கெய்ல் முழக்கம்!

மக்கள், என்னை டி20 கிரிக்கெட்டின் ராஜா என்று புகழ்கிறார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜாவும் நானே...
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் நானே ராஜா: கிறிஸ் கெய்ல் முழக்கம்!
Updated on
1 min read

டி20 கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் நானே ராஜா என மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மக்கள், என்னை டி20 கிரிக்கெட்டின் ராஜா என்று புகழ்கிறார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜாவும் நானே. நான் இரண்டு முச்சதங்கள் அடித்துள்ளேன். 21 ஒருநாள் போட்டிச் சதங்களும்கூட. அதனால், அனைத்துவித கிரிக்கெட்களுக்கும் நானே ராஜா.

டெஸ்ட் மேட்ச் என்பது அற்புதமானது. உங்களுடைய மனநிலையைப் பரிசோதிக்கும். டி20 கிரிக்கெட்டால் பல புதிய ரசிகர்கள் இந்த விளையாட்டுக்குக் கிடைத்திருக்கிறார்கள். ஆகவே டி20 கிரிக்கெட்டையும் நாம் தொடரவேண்டும். டி20 பிடிக்காதவர்கள் டெஸ்ட் மேட்சுகளைப் பார்த்துக்கொள்ளலாம்.

நான் அதிக சர்வதேசப் போட்டிகளில் ஆட ஆர்வமான உள்ளேன். சொந்த ஊருக்குத் திரும்பியபிறகு பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். என் எதிர்காலத்தைப் பற்றி விவாதிப்பேன். என்னை அணியில் சேர்க்க ஆர்வமாக உள்ளார்களா என்று பார்ப்பேன். ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com