இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த புதன்கிழமை தொடங்கியது.
மழை பாதிப்புக்கு நடுவே முரளி விஜய்யின் சதமும், அஜிங்கியா ரஹானேவின் அசத்தலான ஆட்டமும் கைகொடுக்க, 3-ஆம் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 462 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 2 ரன்களுடனும், ஹர்பஜன் சிங் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்கதேசம் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும், ஜுபேர் ஹூசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். போட்டி முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதாலும், மழை பாதிப்பு இருப்பதாலும் இந்த ஆட்டம் டிராவில் முடிய வாய்ப்பிருப்பதாக உள்ளதால் இன்று முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் கோலி.
பிறகு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த வங்கதேச அணி 6-வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. தமிம் இக்பால், அஸ்வின் பந்துவீச்சில் 19 ரன்களில் அவுட் ஆனார். 20-வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது வங்கதேச அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.