ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இந்திய கிரிக்கெட் வீரர்களை இழிவுபடுத்திய வங்கதேச நாளிதழ்!

இதற்கு வங்கதேச ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

News image
Updated On :30 ஜூன் 2015, 12:12 pm

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை வெற்றி கண்டது வங்கதேச அணி. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்களை இழிவுபடுத்தி வங்கதேச நாளிதழ் ஒன்று புகைப்படம் வெளியிட்டுள்ளது.

வங்கதேச நாளிதழான புரோதோம் ஆலோ, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் ஆஃப் கட்டர்களில் இந்திய அணி வீழ்ந்ததை கேலி செய்யும் விதமாக ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி, கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, ஜடேஜா, ஷிகர் தவண், அஸ்வின் ஆகியோர் அரை வழுக்கையுடன் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்திய வீரர்களுக்கு மேலே முஸ்தாபிசுர் கையில் கத்தியுடன் உள்ளதால் அவரால் இந்திய வீரர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நாளிதழ் குறிப்பிடுகிறது. நாங்கள் அதைப் பயன்படுத்திவிட்டோம், நீங்களும் பயன்படுத்தலாமே என்கிற வாசகம் கொண்ட பேனரை இந்திய வீரர்கள் கையில் பிடித்துள்ளார்கள்.

புரோதோம் ஆலோ தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு வங்கதேச ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.